இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டு குமிழ்கள் By எஸ்.ராமகிருஷ்ணன்.

படம்
https://www.youtube.com/watch?v=i3axPonImEQ   எஸ் . ராமகிருஷ்ணன்   ( பிறப்பு :   ஏப்ரல் 13 ,  1966 ) தற்காலத் தமிழ்ப் படைப்புலக எழுத்தாளர் . புதினங்கள் , சிறுகதைகள் , கட்டுரைகள் , நாடகங்கள் , குழந்தைகளுக்கான ஆக்கங்கள் , திரைக்கதை , திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு , தனது உரைகள் , பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள் , திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார் .   சஞ்சாரம்   என்னும் இவருடைய படைப்புக்கு  2018  சாகித்திய அகதெமி விருது   இவருக்கு வழங்கப்பெற்றது . விருதுநகர் மாவட்டத்தில்   உள்ள   மல்லாங்கிணற்றைச்   சொந்த ஊராகக் கொண்ட இவரது பெற்றோர் சண்முகம் , மங்கையர்க்கரசி . இவரது தந்தைவழித் தாத்தா   திராவிட இயக்கத்தில்   பற்றுடையவர் . தாய்வழித் தாத்தா   சைவ சமயப்   பற்றுடையவர் . இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள் , சமூகச் சிந்தனைகளைப் படித்தும் , பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார் . ஆங்கில இலக்கியம் பயின்று அதிலேயே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி இடையில் கைவிட்டிருக்கிறார் . இவரது முதல் கதையான "பழைய தண்டவாளம்&q

மளுவானயும் ரம்புட்டான் தோட்டங்களும்

படம்
மளுவானயும் ரம்புட்டான் தோட்டங்களும் கதை சொல்கிறேன்-25 மளுவானயும் ரம்புட்டான் தோட்டங்களும் BY ஹமீது தம்பி இந்த கதை "மலுவானையும் ரம்புட்டான் தோட்டங்களும் " நான் எழுதியது .இது 2022 பிப்ரவரி கணையாழி இதழில் வெளிவந்தது .இந்த கதை ஓர் உண்மைக்கதை. இது 1950-60 களில் நடந்தது .என்னோடு வாழ்ந்த ஒரு சாமானியனின் கதை . சேது பூமியும் ,இலங்கையும் ஒரே நாடுபோல் இருந்த காலம் . அது விடுதலைப்புலிகளின் போராட்டங்களுக்கு முந்தைய காலகட்டம் . தொடர்ந்து இந்த சேனலில் தமிழில் சிறந்த சிறு கதைகள் ,குறு நாவல்கள்', வெளிவரும் .தொடர்ந்து பாருங்கள் . மறக்காமல் பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் . உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் .நன்றி ஹமீது தம்பி .

"ஒரு மனுசி" By பிரபஞ்சன். கதை சொல்கிறேன்-24

படம்
"ஒரு மனுசி" By பிரபஞ்சன். கதை சொல்கிறேன்-24 பிரபஞ்சன் பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். இவரது தந்தை ஒரு கள்ளுக்கடை வைத்திருந்தார். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். 1961ல், இவரது முதல் சிறுகதை என்ன உலகமடா பரணி என்ற இதழில் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இதுவரை 46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார். 1995ல் இவரது வரலாற்றுப் புதினம் வானம் வசப்படும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இப்பபுதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. இவரது படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாடகமான முட்டை தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான நேற்று மனிதர்கள் பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது. சாமானிய

"இரவின் காலடி ஓசை"

படம்
  கமலா தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுரைiயா என்ற மாதவிக்குட்டி, (மார்ச் 31, 1934 - மே 31, 2009) ஓர் இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை. கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' (தற்போது திருச்சூர் மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை வி.எம்.நாயர், மாத்ருபூமி என்ற மலையாள தினசரி செய்திதாள் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார். தாயார் நலபாத் பாலாமணி அம்மா புகழ்பெற்ற மலையாள கவிஞர் ஆவார். கமலா ஓர் பாரம்பரிய இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தவர்.[4] ஆனால் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாம் மாதத்திற்கு மாறினார். தனது பெயரை கமலா சுரையா என்று மாற்றிக்கொண்டார். கமலா பெரும்பாலும் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிவந்தார். இவரின் முதல் 'கல்கத்தாவில் கோடைகாலம்' 1965 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை தொடர்ந்து 'வம்சத்தவர்' என்ற தொகுப்பு 1967 ஆம் ஆண்டு வெளிவந்தது இது பெண்கள் மத்தியி

"அழிவற்றது"

படம்
  அசோகமித்திரன் (செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017) தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். 1996-இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஐதராபாத்தைக் கதைக்களமாகக் கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துகளை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்து உண்டு.இவர் 2017 மார்ச்சு 23 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தன் மகன் வீட்டில் 86 ஆம் அகவையில் இறந்தார். இந்த கதையின் களம், சென்னை அல்லது ஐதராபாத் இரண்டும் இல்லை .அமெரிக்காவில் உள்ள சிறிய நகரம் . கதையை கடைசிவரை கேளுங்கள் . மேலும் பிரபலமானவர்களின் சிறுகதைகளை தொடர்ந்து கேட்க பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் .

புரட்சி எழுத்தாளரின் கதாநாயகி

படம்
  கு.அழகிரிசாமி உயர்கல்வி படித்தவர் அல்லர் என்றாலும், தம்மைத் தனிப்பட்ட முறையில் தகுதிப்படுத்திக் கொண்டவராவார். அவர் சிறந்த இலக்கிய ஆராய்ச்சியாளராகவும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது இலக்கியக் கட்டுரைகள், அவரது படிப்பின் அகலத்தைக் காட்டுவதுடன், அவரது ஆய்வுத் திறனையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. பிறமொழி இலக்கியங்களைத் தமிழ் மொழி இலக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யும் ஒப்பாய்வு முறை அவரிடத்தில் காணப்படுகிறது. எங்ஙனம் சென்றிருந்தேன்?, காணி நிலம் என்ற கட்டுரைகள் அவருடைய ஒப்பாய்வுத் திறனுக்குச் சரியான எடுத்துக்காட்டுகளாகும். புகையிலையும் இலக்கியமும் என்ற கட்டுரை பல்துறை ஆய்வாகச் (Multi Disciplinary Research) சிறந்துள்ளது. சிறந்த நூல் மதிப்புரைகளையும் இவர் பத்திரிகை ஆசிரியராக இருந்த போது செய்துள்ளார். அத்துடன், கு.அழகிரிசாமி சிறந்த தகவல் சேகரிப்பாளராகவும் இருந்துள்ளார். சேகரித்த தொகுப்புகளைக் குறிப்புகளுடன் பாதுகாத்துள்ளார். மலேசியாவில், கு.அ. பரம்பரை என அடக்கமாகக் கூறிக்கொள்ளும் பல எழுத்தாளர்கள் இவருடைய பாணியில் தோன்றி இன்றும் கதை படைத்து வருகின்றனர். SORT BY

"கோடம்பாக்கம்"-

படம்
  சாரு நிவேதிதா (Charu Nivedita, பிறப்பு: 18 டிசம்பர் 1953) தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். மிக பரந்த வாசகர் பரப்பை கொண்டவர். அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன. அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். இறுக்கம் மிகுந்த நவீன வாழ்வில் சக மனிதன் மீதும், பிராணிகள் மீதும், இயற்கை மீதும் அன்பை போதிப்பவை சாரு நிவேதிதாவின் எழுத்து. இவரது நாவல் ஸீரோ டிகிரி, சுவிட்சர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு [1] 2013-ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், 2001 - 2010 தசாப்தத்தின் [2][3] இந்தியாவின் முதன்மை பத்து மனிதர்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது. தி இந்து தனது தீபாவளி மலரில், தமிழகத்தின் மனதில் பதிந்த முகங்களில் ஒருவராக 2014-ஆம் ஆண்டு இவரைத் தேர்ந்தெடுத்தது. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிபெயர்ப்பில் வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

'ஒரு சிறு இசை'

படம்
  வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி. கல்யாணசுந்தரம் (S. ... 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. இந்த சிறு கதை இந்த விருதுபெற்ற தொகுப்பில் , அதே பெயரில் வெளிவந்திருக்கும் சிறு கதை .எதார்த்தமாக சாதரனமநிதர்களின் வாழ்வியலை படம்பிடித்துக்கான்பிக்கிறார் . கடைசிவரை பாருங்கள் . தொடர்ந்து கதைகல்கேட்க லைக் செய்து பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் பண்ணுங்கள் .உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் .அது இந்த சேனலை மேலும் மேம்படுத்த உதவும் .நன்றி.

"பிழை"

படம்
  ஜெயமோகன் (Jeyamohan), பிறப்பு: 22 ஏப்ரல் 1962) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார். இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும் நுட்பங்களும் வெளிப்படும். இவர் தன்னை "இந்தியத் தமிழ் மரபை நவீன காலகட்டத்தின் அறத்திற்கு ஏற்ப மறுவரையறை செய்தவர் ஜெயமோகன்" என அறியப்பட வேண்டும் என விரும்பினார். அவர் பெற்ற விருதுகள் • 1990 ஆண்டு அகிலன் நினைவுப்போட்டிப் பரிசைப் பெற்றார். • 1992 ஆம் ஆண்டுக்கான கதா[7] விருதைப் பெற்றார். • 1994 ஆம் ஆண்டுக்கான சம்ஸ்கிருதி சம்மான்[8] தேசியவிருது பெற்றுள்ளார். • 2008 ஆம் ஆண்டு பாவலர் விருது பெற்றார்[9] • 2010 ஆம் ஆண்டு முதல் இவரது படைப்பான விஷ்ணுபுரம் பெயரால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது ஒன்றை அளிக்கிறது. • 2011 ஆம் ஆண்டு அறம் சிறுகதைத் தொகுதிக்காக முகம் விருது பெற்றார் • 2012 சிறந்ததிரைக்கதைக்கான கேரளா ஃபிலிம் கிரிட்டிக்ஸ் விருது ஒழிமுறி • 2012- சிறந்த திரைக்கதைக்கான டீ ஏ ஷாஹித் விருது ஒழிமுறி • 2014- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது[10] திரைப்படங்கள்

"தொலைவு"

படம்
  இலக்கியம் தனிமொழியன்று, உரையாடல். உரையாடல் எனும்போது, நடையைப் பொறுத்த விஷயம். நடை என்பது சிந்தனையின் நிழல். காற்றாடி பறப்பதற்கு எதிர்க்காற்று தேவைப்படுவதுபோல படைப்பாளிக்கு ஒரு வாசகன் தேவை. `நான் எனக்காக எழுதுகிறேன்’ என்று சொல்வதெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாகும். இலக்கியம், மனிதன் சமுதாயத்தோடு கொள்கின்ற உறவுகளை நிச்சயப்படுத்தும் உணர்ச்சிகளின் பரிமாற்றம்” என்கிற தெளிவான பார்வையுடன் தன் படைப்புப் பயணத்தை, கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக, தொய்வின்றித் தொடர்பவர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. தந்திரபூமி, குருதிப்புனல், சுதந்திரபூமி, வேதபுரத்து வியாபாரிகள், ஆகாசத்தாமரை, மாயமான் வேட்டை, திரைகளுக்கு அப்பால், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன உள்ளிட்ட அவரது நாவல்களுக்காகவும் மழை, போர்வை போர்த்திய உடல்கள், கால எந்திரம், நந்தன் கதை, ஒளரங்கசீப், ராமானுஜர், கொங்கைத் தீ, பசி போன்ற நாடகங்களுக்காகவும் கொண்டாடப்படும் அவர், நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

"குருபீடம்"

படம்
  ஜெயகாந்தன் அவர்கள், மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். அவர் ஓரளவே படித்திருந்தாலும், தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்து, தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைத் தன் எழுத்துக்களால் கொள்ளைக் கொண்டவர். ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல், கட்டுரையாளர், பத்திரிகையாளர், துண்டு வெளியீடுகளை எழுதுபவர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டு, தமிழ் இலக்கியத்திற்கு அருட்தொண்டாற்றியவர் ஜெயகாந்தன் என்று சொன்னால் அது மிகையாகாது. இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர். மேலும், இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’ தமிழ் இலக்கியத்திற்காக முதல்முறைப் பெற்றார். ‘சாஹித்ய அகாடமி விருது’, ‘ரஷ்ய விருது’ என்று பல்வேறு விருதுகளுக்குத் தகுதியானவர் ஜெயகாந்தன் அவர்கள்.அவர் 1970 தில் எழுதிய "குருபீடம்" இன்று கேட்கப்போகும் கதை .கடைசிவரை பாருங்கள் .உங்கள் கருத்துக்களை கமென்ட் செய்யுங்கள் .தொடர்ந்து சிறந்த

"எஸ்தர்'

படம்
  "எஸ்தர்' எழுதியவர் வண்ணநிலவன். கதை சொல்லும் இந்த சேனலில் இந்த கதையை சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . வரண்டுவிட்ட பூமியிலிருந்து இடம்ப்பெயர்ந்த தலைமுறையின் கதையை ,வண்ணநிலவன் அப்படியே பதிவிட்டிருக்கிறார் .பல சந்தர்பங்களில் நமது ஊகத்தின் கற்பனையை கிளரிவிட்டிருக்கிறார் . கடைசிவரை பாருங்கள் . உங்கள் கருத்துக்களை கமென்ட் செய்யுங்கள் . மேலும் நல்ல கதைகளை சொல்ல அது உதவியாக இருக்கும் . மேலும் சிறந்த கதைகளை கேட்க சப்ஸ்க்ரைப் பெல் பட்டனை அழுத்துங்கள். பிடித்திருந்தால் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் .

'மிலேச்சன்'

படம்
  'மிலேச்சன்' எழுதியவர் "அம்பை" தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான அம்பைக்கு, 2021-ம் ஆண்டு தமிழ்மொழிக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்காக அவருக்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்படுகிறது.. அவர் எழுதிய இந்த சிறுகதை உங்களுக்கு பிடிக்கும் .கடைசிவரை கேளுங்கள். தொடர்ந்து வரும் சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை கேட்கவிரும்பினால் பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யவும் .

"ஒரு மாமரமும் சில பறவைகளும்".

படம்
  "ஒரு மாமரமும் சில பறவைகளும்". எழுதியவர் தோப்பில் முஹம்மதுமீரான் . இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்போவது தோப்பில் முஹம்மது மீரான் எழுத்தின் சிறப்பு.தோப்பில் முஹம்மது மீரான் கதைகள் சமுதாயத்திற்கு நேராக வெளிச்சம் காட்டும் கதைகள் அல்ல. வகுப்புவாத சிந்தனையால மனிதநேயம் தொலைந்துபோவதை, மேல்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் தனிமையுணர்வோடு தவிப்பதை, தாய் தந்த உறவுகளை இழுத்து அறுத்துக் கொண்டு தனிமனிதர்களாக வாழ விரும்பும் இன்றைய தலைமுறையின் மனோபாவங்களை , பச்சையிலை வாசம் கமழும் கிராமச் சூழலில் நகரநாகரீகம் புகுந்து முகங்களில் சாயம் பூசி விடப்பட்ட மனிதமனங்களின் ஆழங்களை எல்லாம் மிகத் துல்லியமாகத் துழாவி எழுத்தால் உருமாற்றிக் காட்டுகின்றன தோப்பில் முஹம்மது மீரான் எழுத்துக்கள்……

"அரிசி"

படம்
  "அரிசி" எழுதியது சுஜாதா இந்த சிறு கதையை கடைசி வரை முழுமையாகப்படியுங்கள்.சுஜாதா முன்பு எழுதிய இந்தக்கதைக்கும் ,முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த அறிவிப்புக்கும் தொடர்பு உண்டு . சுஜாதாவின் ஆதங்கத்தை ஸ்டாலின் தீர்த்துவைத்திருக்கிறார் .

நாடகக்காரி .

படம்
  இன்று கேட்கப்போகும் கதை .நாடகக்காரி .எழுதியது ரஸ்ய எழுத்தாளர் அன்டன் செக்கோவ். ரஷ்ய இலக்கியங்கள் மட்டுமல்ல உலக இலக்கிய வரிசையிலும் , தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் .டால்ஸ்டாய்,கோர்கி, புஷ்கின் போன்ற ரஷ்ய எழுத்துலக மேதைகளின் வரிசையில் இருப்பவர் .இந்த சிறு கதையை தமிழில் மொழிபெயர்த்திருப்பது ,தமிழில் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான புதுமைப்பித்தன் . ஜார் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் 19 ம் நூற்றாண்டில் இருந்த சமூகத்தை அருமையான இந்த சிறுகதையில் சொல்லி இருக்கிறார் செக்கோவ். அது இன்றைய சமூகத்தையோ ,அல்லது நம் நாட்டிலோ இன்றும் பொருந்தும் நிகழ்வாகத்தான் இருக்கிறது . கடைசிவரை பாருங்கள் . சப்ஸ்க்ரைப். செய்யுங்கள் .பிடித்திருந்தால் கமென்ட் செய்யுங்கள்.

ஒற்றை ரோஜா

படம்
 ஒற்றை ரோஜா கதை சொல்கிறேன் சேனலில் இது 9 தாவது கதை " ஒற்றை ரோஜா" .எழுதியவர் "கல்கி கிருஷ்ணா மூர்த்தி அவர்கள் .அவர்கள் எழுதிய இந்த மர்மக்கதையில் சஸ்பென்ஸ் இறுதிவரை தொடர்கிறது .ஆகவே இறுதிவரை பாருங்கள் .உங்களின் விமர்சனங்களை கீழே கமென்ட்டில் பதிவிடுங்கள் .அவை என்னை ஊக்குவிக்கவும் ,திருத்திக்கொள்ளவும் உதவும் .மேலும் சிறந்த கதைகளை தமிழில் வாசிக்க உள்ளேன் . தொடர்ந்து பாருங்கள் . ,லைக் பட்டனை அழுத்தி உங்கள் விருப்பத்தை தாருங்கள் . சப்ஸ்கிரைப் செய்ய பெல் பட்டனை அழுத்துங்கள் .பிடித்திருந்தால் ,உங்கள் நண்பர்களுக்கு சேர் செய்யுங்கள்

கோமதி

படம்
  கோமதி - எழுதியது கி. ராஜநாராயணன். திருநங்கையரின் உணர்வுகளை சொல்லும் முதல் சிறுகதை . கரிசல் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் இவர்,. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள இடைசெவல் கிராமத்தில் 1922ஆம் ஆண்டு பிறந்தவர. கிராவின் இயற்பெயர் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணன பெருமாள் என்பதாகும். இவர் ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பின்னர் விவசாயம் பார்த்து வந்த கிரா, 40 வயதுக்கு மேல் எழுத்து பணிகளைத் தொடங்கினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமிய கதைகள் எனப் பல தளங்கியங்களிலும் சிறந்து விளங்கியவர் கி.ரா. கடந்த 1991ஆம் ஆண்டு இவரது 'கோபல்லபுரத்து மக்கள்' என்ற படைப்பிற்குச் சாகித்திய அகாடாமி விருது வழங்கப்பட்டது. கரிசல் கதைகள், கொத்தைப்பருத்தி உள்ளிட்டவை கி.ரா.வின் மற்ற முக்கிய படைப்புகளாகும். இவர் இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசு விருது, தமிழ் இலக்கிய சாதனை விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

வைராக்கிய வைரி

படம்
  வைராக்கிய வைரி எழுதியவர் . சு.சமுத்திரம். சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். அவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது படைப்புகளின் . முக்கியக்களமாக சோஷியலிசக் கருத்துக்கள்களும், அடிமட்டத்து வாழ்க்கையும் மக்களின் துன்பங்களும் பரவி அமைந்தன. 1990ல் அவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் அவர் ஒரு விபத்தில் காலமானார்
படம்
  -டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும் நல்ல கதை ஒன்று சொல்கிறேன் -6. இன்று கேட்கப்போகும் கதை ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும். 1969 ல் எழுதியது
படம்
  -இன்னொரு தடவை இன்னொரு தடவை என்ற இந்த சிறுகதையை எழுதிய முனைவர். ரெ.கார்த்திகேசு.மலேசியாவின் புகழ்பெற்ற எழுத்தாளரும் கல்வியாளருமான முனைவர் ரெ.கார்த்திகேசு. ரெ.கா என்று அனைவராலும் மரியாதையோடு அழைக்கப்பட்ட வர், ரெ.கார்த்திகேசு Ph.D., மலேசியா, பினாங்கைச் சேர்ந்தவர்.. மலேசியாவில் நன்கறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், திறனாய்வாளர் 0  Comments SORT BY
படம்
நம்பிக்கை(Persuasion) உலக இலக்கியங்கள் பலவற்றை நான் அமேசான் KDP யில் சுயபதிப்பு செய்து வருகிறேன் .இதுவரை 300 க்கு மேற்பட்ட புத்தகங்கள் கிண்டில் மற்றும் பேப்பர்பேக் வடிவில் வெளியிட்டிருக்கிறேன்.ஜேன் ஆஸ்டின் எழுதிய இந்த Persuasion (நம்பிக்கை ஏற்படுத்துதல் ) நாவல் அவற்றில் முக்கியமானது .18 ம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் ,மறைவுக்கு பிறகே இந்த நாவல் வெளிவந்தது.. நவீன ஆங்கில இலக்கியத்தில் ஜேன் ஆஸ்டினுக்கு, பங்கு மிக முக்கியமானது .
படம்
  உலக இலக்கியங்கள் பலவற்றை நான் அமேசான் KDP யில் சுயபதிப்பு செய்து வருகிறேன் .இதுவரை 300 க்கு மேற்பட்ட புத்தகங்கள் கிண்டில் மற்றும் பேப்பர்பேக் வடிவில் வெளியிட்டிருக்கிறேன். அவற்றில் அதிகம் விற்ற கிண்டில் பதிப்பு இந்த பமிலாதான். 600 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்த கதையை சுருக்கி உங்களுக்கு தமிழில் சில நிமிட கதையாக சொல்கிறேன் .
படம்
  ஆசாடபூதி .(Tartuffe)பிரெஞ்சு நாவல் .ஜீன்-பாப்டிஸ்ட் பொக்குலின், மேலியர் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தியவர்,வோல்டேர் அவரை "பிரான்சின் ஓவியர்" என்று வர்ணித்தார், ஏனெனில் அவரது படைப்புகள் அவரது நாட்டின் தீமைகள் மற்றும் நல்லொழுக்கங்களுக்கு ஒரு கண்ணாடியாக காட்டியது. தமிழாக்கம் செய்தவர் புதுமைப்பித்தன் .