"தொலைவு"
இலக்கியம் தனிமொழியன்று, உரையாடல். உரையாடல் எனும்போது, நடையைப் பொறுத்த விஷயம். நடை என்பது சிந்தனையின் நிழல். காற்றாடி பறப்பதற்கு எதிர்க்காற்று தேவைப்படுவதுபோல படைப்பாளிக்கு ஒரு வாசகன் தேவை. `நான் எனக்காக எழுதுகிறேன்’ என்று சொல்வதெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாகும். இலக்கியம், மனிதன் சமுதாயத்தோடு கொள்கின்ற உறவுகளை நிச்சயப்படுத்தும் உணர்ச்சிகளின் பரிமாற்றம்” என்கிற தெளிவான பார்வையுடன் தன் படைப்புப் பயணத்தை, கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக, தொய்வின்றித் தொடர்பவர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி.
தந்திரபூமி, குருதிப்புனல், சுதந்திரபூமி, வேதபுரத்து வியாபாரிகள், ஆகாசத்தாமரை, மாயமான் வேட்டை, திரைகளுக்கு அப்பால், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன உள்ளிட்ட அவரது நாவல்களுக்காகவும் மழை, போர்வை போர்த்திய உடல்கள், கால எந்திரம், நந்தன் கதை, ஒளரங்கசீப், ராமானுஜர், கொங்கைத் தீ, பசி போன்ற நாடகங்களுக்காகவும் கொண்டாடப்படும் அவர், நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக