இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கன்னிமை-கி.ராஜநாராயணன்.

படம்
கி.ராஜநாராயணன். “வாய்மொழி வரலாற்றைப் பொது வரலாறு ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதை மாற்றித் தனது படைப்புகளின் வழியே வாய்மொழி வரலாற்றின் உண்மைகளை வரலாற்றின் சாட்சியங்களாக மாற்றினார் கி.ரா. ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்லபுரத்து மக்கள்’ இரண்டு படைப்புகளும் இதற்கான சிறந்த உதாரணங்கள்.” - எஸ்.ராமகிருஷ்ணன். கரிசல் மண்னையும், அதன் மனிதர்களையும் பற்றி எழுதிய கி.ரா , கதைகள், நாவல், குறுநாவல், கட்டுரை என விரிவான தளத்தில் இயங்கினார். கரிசல் வட்டாரத்தில் சிறப்பாக வழங்கும் தமிழ்ச் சொற்களுக்கான கரிசல் வட்டார வழக்கு அகராதியை உருவாக்கினார். நாட்டுப்புற இலக்கியங்களைத் தேடி, ஆராய்ந்து ஒரு தொகுப்பாக வெளியிட்டார். ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். 1989 ஆம் ஆண்டு புதுவைக்கு வந்த கி.ரா, இலகக்கிய வட்ட நண்பர்கள், மாணவர்கள், கடற்கரை சூழல் எல்லாம் பிடித்துப்போகத் தன் வாழ்நாள் இறுதிவரை புதுவையில் இரு

"மூடர்களின் சொர்க்கம்- வைக்கம் முஹம்மது பஷீர் . தமிழாக்கம்-குளச்சல் யூசுப்.

படம்
வைக்கம் முகமது பஷீர் (Vaikom Muhammad Basheer, 19 சனவரி 1908 - 5 சூலை 1994) மலையாள மொழியின் முதன்மையான இலக்கிய படைப்பாளிகளில் ஒருவர். கேரளத்தில் வைக்கம் அருகே தலையோலப்பறம்பு என்ற ஊரில் பிறந்தார். இளம்வயதிலேயே சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றார். பின்னர் நாடோடியாக வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் சிறுகதைகளும் நாவல்களும் எழுத ஆரம்பித்தார். வாழ்க்கையில் பலவிதமான அனுபவங்கள் வழியாகச் சென்றவர் பஷீர். கப்பல் ஊழியர், சமையற்காரர், சூபி துறவி, சூதாட்டவிடுதி ஊழியர், திருடர் ஆகியபல தொழில்களைச் செய்திருக்கிறார். கடுமையான வறுமையைச் சந்தித்திருக்கிறார். ஆரம்பத்தில் இடதுசாரிகளுடன் ஒத்துழைத்தார். பின்னர் இஸ்லாமிய சூபி மரபை ஏற்றுக்கொண்டவர் ஆனார். ஒருங்கிணைந்த இந்தியாவை தன் தேசமாக ஏற்றுக்கொண்ட பஷீர் கடைசிவரை பாகிஸ்தான் பிரிவினையை ஏற்கவில்லை. காந்தியவாதியாக கடைசிவரை வாழ்ந்தார். அவர் பெற்ற விருதுகள் • பத்மஸ்ரீ விருது (1982) • கேரள சாகித்ய அக்காதமி விருது • மத்திய சாகித்ய அக்காதமி விருது • வள்ளத்தோள் விருது 1993 SHOW LESS 0  Comments SORT BY Add a comment...  

"எனக்கான முத்தம்" : ப்ரியா தம்பி

படம்
ப்ரியா தம்பி என்னுடைய சீரியல் வாழ்க்கை ஆரம்பித்து சரியாக பத்து வருடங்கள் ஆகின்றன.   ‘ வாவ் , அந்த சீரியல் நீங்கதான எழுதறீங்க , ரொம்ப நல்லா இருக்கு , எப்படி எழுதறீங்க ’ என்கிற ஆச்சர்யம் ஒருபுறம் … ‘ சீரியலா எழுதறீங்க. ஏன் எப்பவும் எல்லோரையும் அழ வைச்சிட்டே இருக்கீங்க …’ சீரியல்லாம் எப்படித்தான் எழுதறீங்களோ ’’ என்கிற நக்கல் மறுபுறம் என இருவிதமான விமர்சனங்களோடு தான் இந்த பத்து வருடங்கள் கடந்து போயிருக்கின்றன .- ப்ரியா தம்பி   உனது எழுத்தை உனது மொழியில் நீயே எழுது ’ - என்றார் கவிஞர் இன்குலாப். ஆண்கள் , பெண் வேடமிட்டு எழுதிய எழுத்துகளில் கழிவிரக்கமும் , ‘ உங்களுக்கு ஆதரவாக நான் ’ என்ற வீண் ஜம்பமும்தான் வெளிப்பட்டது. இதையே பெரியார் , ‘ பெண்களுக்காக ஆண் பாடுபடுவதாகச் சொல்வது எலிகளுக்காகப் பூனைகள் பாடுபடுவதாகச் சொல்வதைப்போல ’ என்றார். அடக்கப்பட்ட சமூகமே அவர்களது பிரச்னையை எழுத , பேச , போராடப் புறப்பட்டதுதான் இந்த நூற்றாண்டின் மிக முக்கிய எழுச்சி. அந்த வரிசையில் கவனிக்கத்தக்கது ப்ரியா தம்பியின் எழுத்துக்கள். இந்த அருமையான சிறுகதையை கடைசிவரை பாருங்கள் . தொடர்ந்து தமிழ் கதை கேட்க பெல்

பச்சைக் கனவு-லா. ச. ராமாமிர்தம்

படம்
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (அக்டோபர் 30, 1916 - அக்டோபர் 30, 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்திலிருந்தே எழுதி வந்தவர். இவர், தனது 92வது பிறந்த நாளில் இறந்தார். லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை தன்னுடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற புதினத்தை எழுத வைத்தது. இவருக்கு 1989-ல் சாகித்திய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது. லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவ

கரிய பூனை-எட்கர் ஆலன் போ. தமிழாக்கம்-இல.சுபத்ரா

படம்
எட்கர் ஆலன் போ (Edgar Allan Poe, ஜனவரி 19, 1809 – அக்டோபர் 7, 1849) ஒரு அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், தொகுப்பாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகர். ஆங்கில கற்பனாவாத இயக்கத்தின் (Romantic movement) எழுத்தாளர்களுள் ஒருவரான போ, துப்பறிவுப் புனைவுப் (Detective fiction) பாணியினைக் கண்டுபிடித்தவராகவும் கருதப்படுகிறார். மேலும் அறிபுனை பாணியின் முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படுகிறார். பிரபலமான அமெரிக்க எழுத்தாளர்களுள், எழுத்தின் மூலம் கிட்டிய வருமானத்தை மட்டும் கொண்டு வாழ்க்கையை நடத்த முதலில் முயன்றவர் போ. இதனால் அவர் வறுமையில் வாட நேர்ந்தது. பாஸ்டன் நகரில் பிறந்த போ, இளம் வயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்தார் (அவரது தந்தை குடும்பத்தைக் கைவிட்ட சிறிது நாட்களிலேயே அவரது தாய் இறந்து விட்டார்). பின்னர் ரிச்மண்ட் நகரின் ஆலன் தம்பதியினர் போவை வளர்த்தனர். வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் படித்த போ, பொருளாதார நெருக்கடியால் கல்லூரிப் படிப்பைக் கைவிட்டார். 1827ல் அவரது முதல் புத்தகமான டாமர்லேனும் பிற கவிதைகளும் வெளியானது. அடுத்த பல ஆண்டுகளுக்கு பல இலக்கியப் பத்திரிக்கைகளில் புத்தக விமர்சனங்களை எ

கெட்ட வார்த்தை-ஆதிஷா

படம்
  அதிஷா கோயம்புத்தூரில் பிறந்தார் (1982). இப்போது சென்னையில் வசிக்கிறார். ராமகிருஷ்ணா கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தார். ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் மார்கெடிங்கில் ஈடுபட்டார். பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது தனிப்பட்ட வலைப்பதிவில் வேடிக்கையாக எழுதத் தொடங்கினார். இது அவரை அச்சு ஊடகத்தில் முழுநேர வேலைக்கு அழைத்துச் சென்றது. புதிய தலைமுறை இதழில் பத்திரிக்கையாளராகப் பணியைத் தொடங்கிய அவர், அங்கிருந்து பத்தாண்டுகளில் புகழ்பெற்ற தமிழ் இதழான ஆனந்த விகடன் இதழின் ஆசிரியரானார். அவர் தமிழ் சமூக ஊடக அரங்கில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர். அவர் மூன்று புனைவு அல்லாத புத்தகங்களையும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் எழுதினார், அவை வாசகர்களால் பரவலாகப் பாராட்டப்படுகின்றன. அவர் தனது வலைப்பதிவு மற்றும் முகநூல் பக்கத்தில் அரசியல், சினிமா, உடற்தகுதி மற்றும் அறிவியல் பற்றி அடிக்கடி எழுதுகிறார். அவர் மாரத்தான் ஓட்டம் மற்றும் உலகம் முழுவதும் பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

"பந்தயம்"- ஆன்டன் செகாவ். தமிழாக்கம்-கீதா மதிவாணன் .

படம்
ரஸ்ய எழுத்தாளர் அன்டன் செக்கோவ். ரஷ்ய இலக்கியங்கள் மட்டுமல்ல உலக இலக்கிய வரிசையிலும் , தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் .டால்ஸ்டாய்,கோர்கி, புஷ்கின் போன்ற ரஷ்ய எழுத்துலக மேதைகளின் வரிசையில் இருப்பவர்.”The Bet” என்ற .இந்த சிறு கதையை தமிழில் மொழிபெயர்த்திருப்பது கீதா.மதிவாணன். ஜார் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் 19 ம் நூற்றாண்டில் இருந்த சமூகத்தை அருமையான இந்த சிறுகதையில் சொல்லி இருக்கிறார் செக்கோவ். அது இன்றைய சமூகத்தையோ ,அல்லது நம் நாட்டிலோ இன்றும் பொருந்தும் நிகழ்வாகத்தான் இருக்கிறது . நானூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைச் செகாவ் எழுதியிருக்கிறார். அதில் இருபது முப்பது கதைகள் தமிழில் வந்திருக்கின்றன. புதிதாக நிறைய மொழிபெயர்ப்புகளும் நடந்து வருகின்றன. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் செகாவ் அளவிற்கு மாறுபட்ட சிறுகதையை எழுதியவர்கள் குறைவே, செகாவின் நாடகங்களை வாசித்தால் அதில் வரும் கதாபாத்திரங்கள் நாவலின் மனிதர்களைப் போலவே தோன்றுகிறார்கள். அவற்றைப் பெரிய நாவலாக எழுதியிருந்தால் இன்னும் கதை விஸ்வரூபம் கொண்டிருக்கக் கூடும். காதலைக் கொண்டாடியவர் செகாவ். சொந்த வாழ்விலும், படைப்பிலும் காதலே அவரது ஆ

இந்நாட்டு மன்னர்-நாஞ்சில் நாடன்

படம்
  நாஞ்சில் நாடன் (பிறப்பு: திசம்பர் 31, 1947) வீர நாராயணமங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார். • 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது. • கனடாவின் இலக்கியத்தோட்டத்தின் 2012 ஆம் ஆண்டுக்கான இயல்விருது தொராண்டோவில்