"இரவின் காலடி ஓசை"
கமலா தாஸ்
என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுரைiயா என்ற மாதவிக்குட்டி, (மார்ச் 31, 1934 - மே 31, 2009) ஓர் இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை. கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' (தற்போது திருச்சூர் மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை வி.எம்.நாயர், மாத்ருபூமி என்ற மலையாள தினசரி செய்திதாள் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார். தாயார் நலபாத் பாலாமணி அம்மா புகழ்பெற்ற மலையாள கவிஞர் ஆவார். கமலா ஓர் பாரம்பரிய இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தவர்.[4] ஆனால் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாம் மாதத்திற்கு மாறினார். தனது பெயரை கமலா சுரையா என்று மாற்றிக்கொண்டார். கமலா பெரும்பாலும் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிவந்தார். இவரின் முதல் 'கல்கத்தாவில் கோடைகாலம்' 1965 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை தொடர்ந்து 'வம்சத்தவர்' என்ற தொகுப்பு 1967 ஆம் ஆண்டு வெளிவந்தது இது பெண்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை பெற்றது. மலையாளத்தில் `என் கதா' (My Story) என்ற புத்தகத்தை இவர் எழுதியுள்ளார். இந்த புத்தகம் சுயசரிதையாக கருதப்படுகிறது. இந்த புத்தகம் ஆங்கிலத்திலும் பெயர்க்கப்பட்டது.கமலா கேரள சாகித்ய அகடமியின் துணை தலைவர் பதவி வகித்தார். விருதுகள் கமலா தனது இலக்கிய படைப்புகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார். • 1963: பென் ஏசியன் பொயட்ரி விருது • 1968: கேரளா சாகித்ய அகடாமி விருது – தனுப்பு • 1984: இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யபட்டது • 1985: சாகித்ய அகாடமி விருது (ஆங்கிலம்)– கவிதை தொகுப்பு • 1988: கேரள அரசின் சிறந்த கதைக்கான விருது • 1997: வயலார் விருது – நீர்மதலாம் பூத களம்[9] • 2006: கவ்ரவ டாக்டர் பட்டம் (D.Litt by கோழிக்கோடு பல்கலைகழகம்[12] • 2006: முட்டதே வர்கே விருது • 2009: எழுதச்சன் விருது. 2003 ஆம் ஆண்டு மே மாதம் 31 அன்று கமலா புனே மருத்துவ மனையில் இறந்தார். அப்போது இவரு வயது 75 ஆகும். இவரது உடல் முழு அரசு மரியாதையோடு முஸ்லிம் வழக்கப்படி திருவனந்தபுரம் பாளையம் ஜும்ஆ பள்ளிவாசலில் அடக்கம் செய்யபட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக