"பிழை"
ஜெயமோகன் (Jeyamohan), பிறப்பு: 22 ஏப்ரல் 1962) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார். இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும் நுட்பங்களும் வெளிப்படும். இவர் தன்னை "இந்தியத் தமிழ் மரபை நவீன காலகட்டத்தின் அறத்திற்கு ஏற்ப மறுவரையறை செய்தவர் ஜெயமோகன்" என அறியப்பட வேண்டும் என விரும்பினார்.
அவர் பெற்ற விருதுகள் • 1990 ஆண்டு அகிலன் நினைவுப்போட்டிப் பரிசைப் பெற்றார். • 1992 ஆம் ஆண்டுக்கான கதா[7] விருதைப் பெற்றார். • 1994 ஆம் ஆண்டுக்கான சம்ஸ்கிருதி சம்மான்[8] தேசியவிருது பெற்றுள்ளார். • 2008 ஆம் ஆண்டு பாவலர் விருது பெற்றார்[9] • 2010 ஆம் ஆண்டு முதல் இவரது படைப்பான விஷ்ணுபுரம் பெயரால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது ஒன்றை அளிக்கிறது. • 2011 ஆம் ஆண்டு அறம் சிறுகதைத் தொகுதிக்காக முகம் விருது பெற்றார் • 2012 சிறந்ததிரைக்கதைக்கான கேரளா ஃபிலிம் கிரிட்டிக்ஸ் விருது ஒழிமுறி • 2012- சிறந்த திரைக்கதைக்கான டீ ஏ ஷாஹித் விருது ஒழிமுறி • 2014- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது[10] திரைப்படங்கள் திரைப்படத்துறையிலும் பணியாற்றி வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்[5]. 2006இல் வெளிவந்த கஸ்தூரி மான் இவர் திரைக்கதை எழுதிய முதல் படம். கஸ்தூரி மான் (தமிழ்) 2006 நான் கடவுள் (தமிழ்) 2008 அங்காடித் தெரு (தமிழ்) 2010 நீர்ப்பறவை (தமிழ்) 2012 ஒழிமுறி (மலையாளம்) 2012 கடல் (தமிழ்) 2013 6 மெழுகுவத்திகள் தமிழ் 2013 காஞ்சி (மலையாளம்) 2013 காவியத் தலைவன் (தமிழ்) 2014 நாக்குபெண்டா நாக்கு டாக்கு (மலையாளம்) 2014 ஒன் பை டூ (மலையாளம்) 2014 பாபநாசம் (தமிழ்) 2015 சர்கார் (தமிழ்) 2018 2.0 (தமிழ்) இந்தியன் 2 (தயாரிப்பில்) பொன்னியின் செல்வன் வெந்து தணிந்தது காடு (தமிழ்) நதிகளில் நீராடும் சூரியன் (தமிழ்) சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (ஓர் அத்தியாயம் 'தேவகிச் சித்தியின் டைரி'[6] சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டது.)
கருத்துகள்
கருத்துரையிடுக