இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

CRIME NOVEL- சுஜாதாவின் "என்றாவது ஒரு நாள்"(முழு நீள க்ரைம் நாவல்)

படம்
சுஜாதா 1982-ல் எழுதிய நாவல். குறிக்கோள் ஏதுமின்றி குற்றங்களே பிழைப்பாக வாழ்க்கை நடத்துபவனின் போக்கில் மனத்துக்கு இதமாக குறிக்கிடுகிறாள் ஒரு பெண். புதிர் நிரம்பியவளாக வசீகரிக்கிறாள். அவளுக்காகவே தனது வாழ்க்கையை மாறுபட்டு வாழவேண்டும் எனக் கருதும்போது, செய்த குற்றங்களின் நிழல் அவனை விடாமல் துரத்துகிறது. தவிர அப்பெண்ணின் பின்னணியில் அவிழும் புதிர் எதிர்பாராத முடிவை நோக்கி நகர்த்துகிறது. மிகச் சிறந்த எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்களின் தலைசிறந்த எழுத்தோவியங்களில் ஒன்றான 'என்றாவது ஒரு நாள்' என்னும் இந்நூலில் ஒரே ஒரு கருத்தை மையமாக வைத்து ஆயிரம் கதைகள் உருவாக்கப்படுகின்ற நேரத்தில் ஆயிரம் கருத்துக்கள் இழையோட ஒரு அற்புதமான கதையைக் தந்திருக்கிறார் திரு.சுஜாதா. கண்ணெதிரே நாம் தினமும் சந்திக்கின்ற சம்பவங்கள் நெஞ்சை நெகிழவைக்கும் கதை வடிவம் பெற்றிருக்கின்றன. யதார்த்தங்கள் கதை வடிவம் பெறும்போது எளிதாக இதயத்தை அள்ளிக் கொள்கின்றன. 'என்றாவது ஒரு நாள்' கதையைப் படிக்கின்ற போது - நாமும் அந்தக் கதையில் ஒரு பாத்திரமாக மாறி அவர்களுடனேயே இருப்பதுபோல ஒன்றிவிட முடிகிறது. பாத்திரங்கள் -

CRIME STORY-சுஜாதாவின் "மறக்க முடியாத சிரிப்பு "

படம்
  தூண்டில் கதைகள் தொகுப்பில் வெளிவந்த இந்த கதைகள் குமுதம் வார இதழில் வந்த கதைகள் . இந்த மறக்கமுடியாத சிரிப்பும் அந்த தொகுப்பில் வந்ததாகும் . சுஜாதாவின் பாணியில் க்ரைம் த்ரில்லராக வந்திருக்கும் இந்த கதை ,சுஜாதாவின் மற்ற கதைகளைப்போல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாதது . தொடர்ந்து இந்த சேனலில் தமிழில் சிறந்த கதைகள் தொடர்ந்து வெளிவரும் .அவற்றில் சுஜாதாவின் கதைகள் முக்கிய இடம் பெரும் . தொடர்ந்து கதை கேட்கவிரும்புபவர்கள் பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.லைக் செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் .நல்ல கதைகள் படிக்க ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கு பார்வேர்ட் செய்யுங்கள் .

1:16 / 13:22 CRIME STORY-சுஜாதாவின்-ஓர் அரேபிய இரவு "

படம்
  அறுபதுகளில், சுஜாதாவின் புனைவுகளில், தமிழ் உரைநடை புதுத்தோற்றம் கொண்டு வாசகர்களை மிரளவைத்தது. மரபு எழுத்துப்பாணியிலேயே மயங்கிக் கிடந்த வாசகர்களை எழுந்து உட்கார வைத்தவர் சுஜாதா. அவரது மொழி, தமிழோடு ஆங்கிலம் கலந்த பேச்சுமொழி; கூடவே இளைஞர்களின் மொழியாகவும் அது அமைந்துவிட்டதால், இளம் வாசகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அரைத்த மாவையே திருப்பித் திருப்பி அரைக்கும் ஸ்டீரியோ டைப் எழுத்து ஸ்டைலை தூக்கிக் கடாசியவர் சுஜாதா. அந்த வகையில் தமிழ் உரைநடை வளர்ச்சியில் அவரது பங்கு அலட்சியப்படுத்த முடியாதது. அவரது காலகட்டத்தில், மரபுசார் எழுத்தாளர்கள், விமர்சகர்களின் தாக்குதல்கள் அவரைத் தொடர்ந்து கொண்டே இருந்தன. சளைக்காது அவற்றை அவர் இயல்பாக எதிர்கொண்டார். மனிதம் போற்றும் உன்னதமான கதைகளைக் கொண்ட இலக்கியப் பொக்கிஷம், ‘1001 அரேபிய இரவுகள்’. மேற்கத்திய இலக்கியம், சினிமா, இசை, ஓவியம் போன்ற துறைகளில் இக்கதைகள் செலுத்திய தாக்கம் அளப்பரியது. இவரின் இந்த ஓர் அரேபிய இரவு சிறுகதை மெல்லிய புன்னகையை வரவழைக்கிறது, Tamil Stories telling Channel. The Stories are written by well known Tamil and world writers. Particu

Feminism -தமிழ் கதை-வாசந்தியின் "நஞ்சு".

படம்
  சிசுக்கொலை- இந்தக் கதை ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னும் ஒரு பெண் இருந்தால், ஒவ்வொரு ஆசிர்வதிக்கப்பட்ட ஆணின் பின்னாலும் ஒரு மகள் இருக்கிறாள். மகள்கள் ஒருவரின் இதயத்தில் தூண்டும் உணர்வுகள் ஒப்பற்றவை; அவற்றை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, ஆனால் இதயத்தில் மட்டுமே உணர முடியும். ஆனாலும், இந்தியர்களான நாம் நம் கலாச்சாரத்தில் பெண் சிசுக்கொலையின் அவமானத்தையும் சாபத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும். பெண் கருக்கொலை என்பது இந்தியர்களாகிய நாம் ஒட்டுமொத்தமாக வெட்கப்பட வேண்டிய ஒரே விஷயம். ஒரே ஒரு பெண் கருவைக் கொல்லப்படும் வரை நாம் தலை நிமிர்ந்து வாழ முடியாது. இந்த அச்சுறுத்தலுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுமக்களின் பங்களிப்பு அதிகமாக தேவைப்படலாம். அந்த நோக்கத்துடன், பிறக்காத ஒரு பெண்ணின் அவலத்தையும் வேதனையையும் தெரிவிக்க முயற்சி இந்த வாசந்தி எழுதிய கதை.

Tamil Story -- தோப்பில் முஹம்மது மீரானின் "இரைகள்"தமிழ் கதைகள்

படம்
  amil Story தமிழ் சிறுகதை தோப்பில் முஹம்மது மீரானின் "இரைகள்" சாமானியனுக்கு கிட்டாத அவசர சிகிச்சை பற்றிய ஆதங்கத்தை வெளிகொண்டுவந்திருக்கிறார் எதார்த்தமாக . “தோப்பில் முஹம்மது மீரான், தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத படைப்பாளி. இஸ்லாமிய குடும்ப வாழ்வை, பாசாங்கில்லாமல் பதிவுசெய்தவர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகங்கள் அவருக்கு உண்டு. மீரான் 1944-ல் கன்னியாகுமரியின் தேங்காய்ப்பட்டினத்தில் பிறந்தார். 1988-ல் வெளியான இவரது `ஒரு கடலோர கிராமத்தின் கதை' தோப்பில் முஹம்மது மீரான் என்ற அசலான படைப்பாளியை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தது. இயல்பு மாறாத இவரது வட்டார மொழிநடை, கைகளிலிருந்து நழுவி ஓடும் வழவழப்பான கடல்மீனையும் உப்புக்காற்றையும் வாஞ்சை குறையாது வாசகர்களுக்குச் சேர்த்தது. பெரும்பாலும் தனது நிலத்தைக் குறித்தே எழுதிய இவரின் படைப்புகளில் துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி போன்றவை முக்கியமானவை. 1997-ம் ஆண்டு தன்னுடைய `சாய்வு நாற்காலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். இதுவரை 6 நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். மலை

ஜெயகாந்தனின்" ரிஷி மூலம்"(அதிக விமர்சனத்துக்குள்ளான கதை)

படம்
 https://youtu.be/Smz3RrWcA-Q?si=08pojgoT97WGg6ss https://youtu.be/Smz3RrWcA-Q?si=08pojgoT97WGg6ss இந்த ரிஷி மூலம் என்கிற கதையை நான் மூன்று வாரம் தினமணி கதிரில் எழுதினேன்.அதன் பிறகு தினமணி கதிரில் வாசகர் கடிதம் ஒன்றைப் பிரசுரித்து,இனிமேல் இது போன்ற கதைகள் தினமணி கதிரில் பிரசுரிக்கப்பட மாட்டாது ‘ என்ற ஆசிரியர் குறிப்பும் வெளிவந்தது . அதனைத் தொடர்ந்து இந்த ரிஷி மூலம் கதையை ஆதரித்து நூற்றுக்கணக்கான கடிதங்கள் எனக்கும் கதிர் ஆசிரியருக்கும் வரலாயின .இப்போதுகூட இலக்கிய விமர்சனம் பயில்கிறவர்களாலும் வாசகர்வட்டாரத்திலும் இந்த ரிஷி மூலம் சமயம் கிட்டுகிற போதெல்லாம் விமர்சிக்கப்படுகிறது .இது பற்றியஎத்தனை விதமான அபிப்பிராயங்கள் உண்டோ அத்தனையையும் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் . இந்தக் கதையை எழுதியதன் மூலம் ஒரு நல்ல கதை எழுதி இருக்கிறேன் என்பதைத் தவிர நான் இந்தச் சமுதாயத்தை உயர்த்திவிட்டதாகவோ கேடுத்துவிட்டதாகவோ நம்பவில்லை. அப்படிப்பட்ட நோக்கங்கள் எதுவும் –கதை எழுதுகிறவன் என்ற முறையில் எனக்கு கிடையாது .இந்தச் சமூகத்தை உயர்த்துகிற பணியில் எல்லா மனிதருக்கும் என்ன பங்கு உண்டோ அந்தப்பங்கு எனக்கும் உண்டு

CRIME NOVEL-சுஜாதாவின் "இளமையில் கொல்"- (க்ரைம் தமிழ் முழு நாவல் )

படம்
 https://youtu.be/9ceD2xxqluw?si=ku1ieBYmmFnnHgwr இளமையில் கொல்' இந்த குறுநாவல் 1987 எழுதுப்பட்டது.சுஜாதா ' என்கிற மாத இதழில் வெளிவந்துள்ளது. சுஜாதா' என்றபெயர் பரவலாக அறியப்பட்டு ஏறக்குறைய ஒரு டிரேட் மார்க்' காக மாறிருந்த காலம்அது. மேகலா குங்குமச்சிமிழ் போன்ற பல பெயர்களுடன் மாத நாவல்கள் தழைத்த காலம். பேப்பர் வியாபாரிகள் நியூஸ்பிரிண்ட் கோட்டா கிடைப்பதற்காக மிச்சமுள்ள காகிதத்தைப் பயன்படுத்த நாவல்களாக அச்சடித்து வெளியிட்ட காலம். அப்போது ஹரிராமன் என்கிறவர் சுஜாதா ' என்கிற பெயரைப் பதிவு செய்துவிட்டார் . பெங்களூருக்கு வந்து என்னை வற்புறுத்திக் கேட்டதில் எழுதித் தந்த கதை இது. -சுஜாதா ரெங்கராஜன்