இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"வெளிய - எழுதியது அ.வெண்ணிலா

படம்
  அ.வெண்ணிலா தமிழக எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர்,ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர், என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கி வருகிறார் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவம் ஆகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும் இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம் மலையாளம் இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன. 2009- 2010ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாடத் திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி புதிய பாட புத்தக உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கியுள்ளார். இவர் எழுதிய இந்த "வெளிய" என்ற கதை விளிம்பு நிலை பெண்களின், இயற்கை உபாதைகளால் ஏற்படும் சங்கடங்களை விவரிக்கிறது. இதை படிப்பதற்கு சிலர் அருவருப்பு அடையலாம் ஆனால் அவை இன்றும் நடக்கும் அவலங்கள். இந்த யதார்த்த உண்மையை நாகரீக உலகம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் முதன்முறையாக பூப்பெய

"அயோத்யா மண்டபம்"-சுஜாதா

படம்
    S. ரங்கராஜன் பிறந்தது சென்னைத் திருவல்லிக்கேணியில் உள்ள தெப்பக் குளத்தின் தெற்குத் தெரு வீதியில். மே 3, 1935 அன்று. வைஷ்ணவர். அப்பா சீனிவாச ராகவன் மின்சாரவாரியம் வாரியமாவதற்கு முன்னால் இருந்து வேலை செய்து கொண்டிருந்தார். அம்மா கண்ணம்மா , ஒரு பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவர். “ சரியாக எழுபது ஆண்டுகளுக்கு முன் , வீட்டுக் காரியங்கள் எல்லாம் முடித்துவிட்டு , வலியெடுத்து , எந்தவித உதவியும் இல்லாமல் , அப்பா மருத்துவச்சியை அழைத்து வருவதற்க்குள் , என்னைப் பெற்றெடுத்த என் அம்மா கண்ணம்மா ”. ரங்கராஜனின் அண்ணன் திரு கிருஷ்ணமாச்சாரி ஒரு டாக்டர் , தம்பி ராஜகோபாலன் தொலைபேசி இலாகாவில் இன்ஜினியர். தங்கை விஜி. “ ராத்திரி என்னவோ ஆச்சு … ரெண்டு தடவை வாந்தியெடுத்தா. கார்தாலை பிராணன் போய்ட்டது ’ என்று பாட்டி அழுதாள். எனக்கு அப்போது பதினொரு வயசு. என் தங்கை விஜிக்கு மூன்று வயது. குழந்தை என்பதால் கையிலேயே தூக்கிப் படித்துறைக்கு கொண்டுசென்று கொள்ளிடக்கரையில் புதைத்தது ஞாபகம் இருக்கிறது. முதன்முறையாக ஆற்றாமை , சோகம் க்ரீப் என் நடைமுறையை பாதித்தது. ” ரங்கராஜன் பிறந்த அந்த வீடு திருவல்லிக்கேணியில் 7

" விடுதலை" எழுதியவர் வாஸந்தி

படம்
" விடுதலை" எழுதியவர் வாஸந்தி வசந்தி (26 ஜூலை 1941 இல் பிறந்தார்.இவரது இயற்பெயர் பங்கஜம். ஒரு இந்திய பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர். மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாற்றில் பட்டமும், நார்வேயில் உள்ள ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.. இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார்.. கலை, கலாச்சாரம் மற்றும் அரசியல் பற்றிய அவரது பல கட்டுரைகள் பல கட்டுரைகளின் தோற்றத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி விவாதங்களை உருவாக்கியுள்ளன.. வசந்தி பெண்கள் பிரச்சினைகள் குறித்து பல விரிவுரைகள் மற்றும் அறிக்கைகளை எழுதியுள்ளார், மேலும் அவர் ஒரு அரசியல் ஆய்வாளராகவும் உள்ளார். பெங்குயின் புக்ஸ், இந்தியா டுடேயின் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தங்களுடைய நிலைப்பாடுகளுடன் ஆங்கிலத்தில் (கட்-அவுட்கள், சாதி மற்றும் சினிஸ் நட்சத்திரங்கள்) ஒரு புத்தகத்தை வெளியிட்டது. 2016 இல் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார்.அவர் சுமார் 40 நாவல்கள் மற்றும் ஆறு சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்.. வசந்தி மு.

"மீராவும் முஹம்மது ஆரிபும்- எழுதியது நிர்மலா ராகவன் .

படம்
நிர்மலா ராகவன் மலேசியாவில் 1942 பிறந்தார்   மலேசியாவில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். ஓய்வு பெற்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியையான இவர் ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதக்கூடியவர். 1967 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகிறார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம் ,விமர்சனங்கள், போன்றவற்றை எழுதி வருகிறார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியாவில், பிரபல ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. பல பல மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் பேசியுள்ளார் .இந்தியர்களிடையே காணும் சமுதாயப் பிரச்சினைகள் குறித்து தீவிரமாக சிந்திக்கும் இவர், தமது எழுத்துகளில் அவற்றின் தீர்வு காண ஆலோசனைகள் வழங்கி வருகிறார். மனோ நிலைகள் பற்றியும் அதிகம் எழுதியுள்ளார் .நேரடி சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். சிறுகதை செம்மல் விருது 1991 லும் ,சிறந்த பெண் எழுத்தாளர் விருது 1993- லும், சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்ற அதற்கான விருது தங்கப்பதக்கம் மலேசிய எழுத்தாளர் சங்கம் 2006 இல் இவருக்கு கிடைத்தது. .   தொடர்ந்து இந்த சேனலில் வரும் படித்ததில் பிடித்த கதைகளை கேட்க

"விபத்து": எழுதியவர் " இன்குலாப்"

படம்
களந்தை பீர்முகம்மது அவர்கள் மதநல்லிணக்கப் போராளிகள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்து வெளியிட்ட " சலாம் இஸ்லாம்" என்ற சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு புத்தகத்திலிருந்து படித்தது. சமூக மாற்றத்துக்காகப் பேனா பிடித்தவரின் எழுத்துக்கள் எதிர்ப்பு இலக்கியமாய்த்தானே இருக்க முடியும்? இலக்கியத்தின் வேலை என்ன? என்று கார்க்கியைக் கேட்டபோது, வேறென்ன போராட்டம்தான்; அதுதான் இலக்கியத்தின் முதல் வேலை என்று சுட்டிக் காட்டினார். இன்குலாப் கார்க்கியின் சீடர்... புதிய திசை வழியைத் தேடி வரும் இன்றைய படைப்பாளிகள் பலருக்கும் இன்குலாப் ஆசான்.... இன்குலாப் (Inkulab, பிறப்பு: 1944 - இறப்பு: திசம்பர் 1, 2016) தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும். 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது இவர் எழுதிய காந்தள்

“அப்பத்தாவும் ஆண்ட்ராய்டு போனும்”

படம்
  “அப்பத்தாவும் ஆண்ட்ராய்டு போனும்” முத்துவிஜயன் எந்த ஒப்பனையும் இல்லாத எளிய மனிதர்களின் வாழ்வென்பது வீதியிலிருந்து தொடங்கும் . அவர்கள் சமூகத்திடம் வாழ்வியலை அன்பினாலே செய்துவிடுகிறார் . அதிலும் குறிப்பாக மதுரையை பிறப்பிடமாகவும் , கல்பாக்கத்தை வாழ்விடமாகவும் கொண்டு வாழ்ந்த படைப்பாளி முத்துவிஜயன் . தற்சமயம் ஓய்வு பெற்று தன்னுடைய பிறந்த கிராமத்தில் தன்னுடைய பிறப்பிடத்தில் வாழ்கிறார் .. இவர் சமூக வலைத்தளங்கள் மற்றும் இலக்கிய உலகில் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர் . இவர் பதிவிடும் சிறுகதைகளை சுடச்சுட வாசிக்க ஒரு வாசகர் கூட்டமே காத்திருக்கும் . மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தை கவிதைகளுக்கும் சிறுகதைகளுக்கும் இருமுறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .இவரது இந்த அப்பத்தாவும் ஆண்ட்ராய்டு என்ற சிறுகதை மண்ணின் சிறப்பை முத்துவிஜயன் கையாண்டு இருக்கிற மொழி கிராமிய மண் மணம் கமழும் வகையில் தென்றலில் குழித்து எழுந்துள்ளது. நம் மனதோடு பெவிகால் போட்டு ஒட்டிக்கொள்ளும். வசீகர எழுத்தால், இந்த கதையில் நம் மனசில் அதன் பசுமை ஈரம

"அப்பா மகள்" எழுதியது ப்ரியா தம்பி

படம்
  கதை சொல்கிறேன். -30 ANALYTICS EDIT VIDEO "அப்பா மகள்" உனது எழுத்தை உனது மொழியில் நீயே எழுது’ - என்றார் கவிஞர் இன்குலாப். ஆண்கள், பெண் வேடமிட்டு எழுதிய எழுத்துகளில் கழிவிரக்கமும், ‘உங்களுக்கு ஆதரவாக நான்’ என்ற வீண் ஜம்பமும்தான் வெளிப்பட்டது. இதையே பெரியார், ‘பெண்களுக்காக ஆண் பாடுபடுவதாகச் சொல்வது எலிகளுக்காகப் பூனைகள் பாடுபடுவதாகச் சொல்வதைப்போல’ என்றார். அடக்கப்பட்ட சமூகமே அவர்களது பிரச்னையை எழுத, பேச, போராடப் புறப்பட்டதுதான் இந்த நூற்றாண்டின் மிக முக்கிய எழுச்சி. அந்த வரிசையில் கவனிக்கத்தக்கது ப்ரியா தம்பியின் எழுத்துக்கள். இந்த "அப்பா மகள்" கதையில் ஆண்களின் வக்கிரங்களை ,அவர்களில் படிப்போ ,அறிவோ புகழோ பதவியோ கூட மாற்றுவதில்லை என்பதையும் ஒரு தந்தை மகளுக்கிடையில் உள்ள அன்பு வெளியில் தெரியா உணர்வுபூர்வமானது என்பதையும் படம்பிடிக்கிறார் ப்ரியா தம்பி . இந்த அருமையான சிறுகதையை கடைசிவரை பாருங்கள் . தொடர்ந்து தமிழ் கதை கேட்க பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் . உங்கள் விமர்சனங்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் .நன்றி