கோமதி

 கோமதி -

எழுதியது கி. ராஜநாராயணன். திருநங்கையரின் உணர்வுகளை சொல்லும் முதல் சிறுகதை . கரிசல் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் இவர்,. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள இடைசெவல் கிராமத்தில் 1922ஆம் ஆண்டு பிறந்தவர. கிராவின் இயற்பெயர் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணன பெருமாள் என்பதாகும். இவர் ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பின்னர் விவசாயம் பார்த்து வந்த கிரா, 40 வயதுக்கு மேல் எழுத்து பணிகளைத் தொடங்கினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமிய கதைகள் எனப் பல தளங்கியங்களிலும் சிறந்து விளங்கியவர் கி.ரா. கடந்த 1991ஆம் ஆண்டு இவரது 'கோபல்லபுரத்து மக்கள்' என்ற படைப்பிற்குச் சாகித்திய அகாடாமி விருது வழங்கப்பட்டது. கரிசல் கதைகள், கொத்தைப்பருத்தி உள்ளிட்டவை கி.ரா.வின் மற்ற முக்கிய படைப்புகளாகும். இவர் இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசு விருது, தமிழ் இலக்கிய சாதனை விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரப்பாச்சி - உமா மகேஸ்வரி`