"ஒரு மாமரமும் சில பறவைகளும்".

 "ஒரு மாமரமும் சில பறவைகளும்".

எழுதியவர் தோப்பில் முஹம்மதுமீரான் . இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்போவது தோப்பில் முஹம்மது மீரான் எழுத்தின் சிறப்பு.தோப்பில் முஹம்மது மீரான் கதைகள் சமுதாயத்திற்கு நேராக வெளிச்சம் காட்டும் கதைகள் அல்ல. வகுப்புவாத சிந்தனையால மனிதநேயம் தொலைந்துபோவதை, மேல்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் தனிமையுணர்வோடு தவிப்பதை, தாய் தந்த உறவுகளை இழுத்து அறுத்துக் கொண்டு தனிமனிதர்களாக வாழ விரும்பும் இன்றைய தலைமுறையின் மனோபாவங்களை , பச்சையிலை வாசம் கமழும் கிராமச் சூழலில் நகரநாகரீகம் புகுந்து முகங்களில் சாயம் பூசி விடப்பட்ட மனிதமனங்களின் ஆழங்களை எல்லாம் மிகத் துல்லியமாகத் துழாவி எழுத்தால் உருமாற்றிக் காட்டுகின்றன தோப்பில் முஹம்மது மீரான் எழுத்துக்கள்……


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Fyodor Dostoevsky

பச்சைக் கனவு-லா. ச. ராமாமிர்தம்

"அச்சக்காடு"-எழுதியது "கிருஷ்ணா டாவின்சி"