இரண்டு குமிழ்கள் By எஸ்.ராமகிருஷ்ணன்.


https://www.youtube.com/watch?v=i3axPonImEQ 

எஸ். ராமகிருஷ்ணன்  (பிறப்பு: ஏப்ரல் 131966) தற்காலத் தமிழ்ப் படைப்புலக எழுத்தாளர். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார். சஞ்சாரம் என்னும் இவருடைய படைப்புக்கு 2018 சாகித்திய அகதெமி விருது இவருக்கு வழங்கப்பெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணற்றைச் சொந்த ஊராகக் கொண்ட இவரது பெற்றோர் சண்முகம், மங்கையர்க்கரசி . இவரது தந்தைவழித் தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர். தாய்வழித் தாத்தா சைவ சமயப் பற்றுடையவர். இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள், சமூகச் சிந்தனைகளைப் படித்தும், பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார். ஆங்கில இலக்கியம் பயின்று அதிலேயே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி இடையில் கைவிட்டிருக்கிறார்.

இவரது முதல் கதையான "பழைய தண்டவாளம்" கணையாழியில் வெளியாகியிருக்கிறது. 1984-இல் எழுதத் தொடங்கிய இவரது எழுத்துகள் ஐம்பதிற்கும் கூடிய எண்ணிக்கையில் நூல்வடிவம் பெற்றுள்ளன.

"இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாகச் செய்து வருபவர் எஸ். ராமகிருஷ்ணன்" என்று ஜெயமோகனும், "ஜெயகாந்தன் போல... எஸ். ராமகிருஷ்ணனும் தமிழில் ஒரு மிகப்பெரும் இயக்கம்" என்று மனுஷ்யபுத்திரனும் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து இந்த சேனலில் தமிழில் சிறந்த சிறு கதைகள் ,குறு நாவல்கள்', வெளிவரும் .தொடர்ந்து பாருங்கள் . மறக்காமல் பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் . உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Fyodor Dostoevsky

பச்சைக் கனவு-லா. ச. ராமாமிர்தம்

"அச்சக்காடு"-எழுதியது "கிருஷ்ணா டாவின்சி"