மறைந்த கிருஷ்ணா டாவின்சி அவர்கள் . 2009ம் ஆண்டு எழுதிய இந்தக்கதை இன்று மிகவும் போருந்திப்போவது, ஆச்சரியமாக இருக்கிறது. இவரும்,அந்த டாவின்சிபோல், இந்த டாவின்சியும் தீர்க்கதரிசியா? என்று தோன்றுகிறது. எல்லோரையும் எல்லோருக்கும் பிடிக்காது. ஆனால் எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான கிருஷ்ணாவை அனைவருக்குமே பிடிக்கும். பத்திரிக்கை உலகில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறோம் என்பதையும் தாண்டி, மிகப்பெரிய எழுத்தாளர் என்பதையும் தாண்டி, அந்த சிரித்த முகம் நையாண்டித்தனமான பேச்சு என அனைவரையும் வசீகரிக்கும். கிருஷ்ணாவைப் போலவே அவரது எழுத்துக்களும் வசீகரமானவைதான். முதன்முதலில் மாலைமதியில் எழுதத்தொடங்கியது முதல் அவரது கடைசி புத்தகமாக ‘இசையானது’ வரை ஒவ்வொரு எழுத்துக்களும் ஆழமான கருத்துச் செறிவுகளை கொண்டவை. வெங்கடகிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட கிருஷ்ணா டாவின்சி (பிறப்பு: மே 7, 1968 இறப்பு: ஏப்ரல் 4, 2012) ஓர் இதழாளர், எழுத்தாளர், திரைப்பட உரையாடல் எழுதுநர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர். சுகந்தி என்னும் புனைப்பெயரில் கதைகள் எழுதிய தன் தந்தையைப் பார்த்து எழுத்தார்வம் கொண்டவர். பலதுறை அறிஞரான லியானர்
கருத்துகள்
கருத்துரையிடுக