இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"வானவர்கள் செல்லும் இடங்கள்" எழுதியவர் தோப்பில் முஹம்மது மீரான்

படம்
  “தோப்பில் முஹம்மது மீரான், தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத படைப்பாளி. இஸ்லாமிய குடும்ப வாழ்வை, பாசாங்கில்லாமல் பதிவுசெய்தவர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகங்கள் அவருக்கு உண்டு. மீரான் 1944-ல் கன்னியாகுமரியின் தேங்காய்ப்பட்டினத்தில் பிறந்தார். 1988-ல் வெளியான இவரது `ஒரு கடலோர கிராமத்தின் கதை' தோப்பில் முஹம்மது மீரான் என்ற அசலான படைப்பாளியை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தது. இஸ்லாமிய வாழ்வியலில் உள்ள பல்வேறு பிரச்னைகளை வெளி உலகுக்குத் தெரியாத அவர்களின் வழக்கங்களை தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தியதில் மீரானுக்குப் பெரும்பங்கு உண்டு. அவருடைய படைப்புகள் அனைத்தும் இஸ்லாமியச் சமூகம் குறித்து நமக்குக் கிடைத்த மிகப்பெரும் ஆவணங்கள். சாகித்திய அகாடமி போன்ற விருதுகளைப் பெற்றவர், அகாடமி தேர்வுக் குழுவிலும், பாடநூல் தேர்வுக் குழுவிலும் இருந்தவர். பல விருதுகளும் பொறுப்புகளும் பெற்றபோதும் எளிமையாய் இருந்த இனிய மனிதர். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். என் போன்ற பல சின்ன எழுத்தாளர்களுக்கு அவர் ஒரு நல்ல வழிகாட்டி. அவர் வீட்டில் அனைவருமே வெகு இயல்பாய்ப் பழகக்கூடியவர்கள். இந்

"ரீதி" எழுதியது பூமணி

படம்
இந்த சிறுகதை எதார்த்தமாக பள்ளி செல்லாத ,ஆட்டிடையர்களின் வாழ்கையை படம்பிடித்துக்காட்டுகிறது. 2014ம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது தமிழ் எழுத்தாளார் பூமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரின் 'அஞ்ஞாடி' என்ற நாவல் இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். இவர் 1947 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். பூமணி பல்வேறு இலக்கியப் பங்களிப்பை தமிழில் தொடர்ந்து செய்து வருகிறார். இவரின் வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், வெக்கை, நைவேத்தியம், பிறகு, வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்கள் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவை. இந்த சேனலில் தமிழில் சிறந்த சிறுகதைகளை காணொளியாக கேளுங்கள். மறக்காமல் சப்ஸ்க்ரைப்செய்து ,உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். 1)அப்பத்தாவும், ஆண்ட்ராய்டு போனும்” எழுதியது அ.முத்துவிஜயன். https://www.youtube.com/watch?v=BM6G-.. . 2) மிலேச்சன்' எழுதியவர் "அம்பை" https://www.youtube.com/watch?v=yBGIM.. . 3) இரவின் காலடி ஓசை",எழுதியவர்-"

மதினிமார்கள் கதை-எழுதியவர் , கோணங்கி

படம்
2021ம் ஆண்டுக்கான ‘விஜயா வாசகர் வட்ட கி.ராஜநாராயணன் விருது’ எழுத்தாளர் கோணங்கிக்கு வழங்கப்படுகிறது. ரூ. 5 லட்சம் விருதுத் தொகை. அநேகமாகத் தமிழில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருதுத் தொகை இதுவாகத்தான் இருக்கும். கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. கிட்டத்தட்ட நூறு சிறுகதைகளும், நான்கு நாவல்களையும் எழுதியிருப்பதோடு, தமிழ் இலக்கியச் சூழலில் தனது மதிப்பைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கும் ‘கல்குதிரை’ எனும் சிற்றிதழை முப்பதாண்டுகளாகச் சீரற்ற இடைவெளிகளில் நடத்திவருகிறார். கல்மண்டபங்களிலிருந்து லோத்தல் கடலடி வரை, குன்றங்களிலிருந்து குகைகள் வரை இந்தியாவின் நாற்திசைகளிலும் பயணித்திருக்கிறார். ஒருமுறை லண்டன் பயணித்திருக்கிறார். ஒவ்வொரு நாவலுக்காகவும் ஓய்வில்லாது மரநிழல் படிந்த சாலைகளிலும், கடுமையான தெற்கத்தி வெயிலில் பாளம்பாளமாய் உடல் வெடித்திருக்கும் கருப்பு நிற நிலங்களிலும் பயணிப்பவர். முழு நேர எழுத்தாளர்களே அருகிப்போயிருக்கும் தமிழ் இலக்கியச் சூழலில், நீண்ட தொடர்ச்சியில் மிச்சமிருப்பவர். கூட்டுறவு வங்கி வேலையை எழுத்துக்காகவே உதறியவர். வெயில் உலைபோல் இருக்கும் கோவில்பட்டி நகரில் இருப்பு

நாதனுள்ளிருக்கையில்- எழுதியவர்-: அகிலன்

படம்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1881369340142959" crossorigin="anonymous"></script> அகிலன் (Akilan) என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (சூன் 27, 1922 - சனவரி 31, 1988) தமிழக எழுத்தாளர் ஆவார். எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்குப் பெயர் பெற்றவராக அகிலன் அறியப்படுகிறார். அகிலன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். சிறப்புப் பெற்ற புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக இவருக்குப் பல முகங்கள் உண்டு. அகிலன் எழுதிய சித்திரப்பாவை என்ற வரலாற்று நாவல் 1975-ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ஞான பீட விருதை வென்றது[1]. இந்நாவல் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவலுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது 1963-இல் கிடைத்தது. எங்கே போகிறோம் என்ற தனித்துவமான சமூக அரசியல் நாவல் 1975-ஆம் ஆண்டில் இவருக்கு ராசா சர் அண்ணாமலை விருதைப

பூனைகள் இல்லாத வீடு -சந்திரா தங்கராஜ் .

படம்
  சந்திரா தங்கராஜ் சென்னைக்கு வந்து 27 ஆண்டுகள் ஆகின்றன. பத்திரிக்கையாளர் பின் திரைப்படத்துறை என்றெல்லாம் இத்தனை ஆண்டுகள் பயணித்தாலும், பிறந்த ஊரான தேனி மாவட்டத்தின் கூடலூரை இன்னும் சுமந்து கொண்டிருப்பது, இந்தக் கதைகளை வாசிக்கையில் தெரிகிறது. சோளம் மற்றும் பூனைகள் இல்லாத வீடு என்ற தொகுதிகளில் வெளிவந்திருக்கும் இந்த கதை, கி ராமகிருஷ்ணன் அவர்களின் தமிழில் சிறந்த 100 சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.பூனைகள் இல்லாத வீடு, ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ந்து ஒவ்வொருவராக வெளியேறி முற்றத்தை வெற்றிடமாக்கி போவதை சொல்வதுடன் முடிவதில்லை. கதைக்குள் கதையாக பெரியம்மா குடும்பத்தின் கதையும் இருக்கிறது. ஒரு சிறுவனின் பார்வையில் நகரும் கதையில் காலம் அவனது வளர்ச்சியை போலவே வேகமாக கடந்து செல்கிறது. ஒரு கூரையின் கீழ் அடித்துக்கொண்டும், கொஞ்சிக் கொண்டும் வாழ்ந்தவர்கள், இனி அவரவர் வாழ்க்கையை வாழப் போவதை எந்த ஆரவாரமும் இல்லாமல் சொல்லி பிரதான கதை நகர்ந்து முடிகிறது. ஆனால் கிளை கதையில் முக்கியமான ஒரு விஷயத்தை மறைத்து வைத்திருக்கிறார் சந்திரா. பூனைகள் என்பது குறியீடு இந்தத் தொகுப்புகளை மூன்று விதமா

மரேய் என்னும் குடியானவன் -பியோதர் தஸ்தயேவ்ஸ்கி

படம்
பியோதர் மிக்கைலோவிச் தஸ்தயெவ்ஸ்கி (Fyodor Mikhailovich Dostoevsky, பரவலாக தஸ்தயெவ்ஸ்கி என அழைக்கப்படுபவர் ஒரு உருசிய மொழி புதின எழுத்தாளரும், சிறுகதை ஆசிரியரும் கட்டுரையாளரும், பத்திரிக்கையாளரும், தத்துவவாதியும் ஆவார். 19 ஆம் நூற்றாண்டு ரஷ்யாவின் சிக்கலான அரசியல், சமூக, ஆன்மீகத் தளங்களில் மனித மனத்தின் ஆழங்களை ஆராய்பவை இவரது படைப்புகள். பல்வேறு வகையான தத்துவ ஆன்மீகப் பின்புலங்களில் இவை முன்வைக்கப்பட்டுள்ளன. தன்னுடைய இருபதுகளில் எழுத ஆரம்பித்தவரின் முதல் நாவல் "புவர் ஃபோக்". இக்கதை 1846ல் பிரசுரமானபோது இவரின் வயது 25. "குற்றமும் தண்டனையும்" (1866), "அசடன்" (1869), "அசுரர்கள்" (1872) மற்றும் "கரமசோவ் சகோதரர்கள்" (1880) ஆகியன இவரது முக்கிய படைப்புகள். 11 நாவல்களும் மூன்று குறுநாவல்களும் 17 சிறுகதைகளும் எழுதியுள்ள தஸ்தயேவ்ஸ்கி, நிறைய புனைவு இல்லாதவற்றையும் எழுதியுள்ளார். இலக்கிய விமர்சகர்கள் இவரை உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த உளவியலாளர்களில் ஒருவராகக் கூறுவதும் உண்டு. இவர் 1864 எழுதிய “இருளுலகிலிருந்து நாட்குறிப்புகள்” தொடக்க கால இருத்தலி