இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ- பெருமாள் முருகன்

படம்
பெருமாள்முருகன் (பி. 1966) ஒரு தமிழ் எழுத்தாளர். இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்தவர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அரசு கலைக் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றித் தற்போது அரசு கல்லூரி முதல்வராக உள்ளார். இவர் பெற்றோர் பெருமாள், பெருமாயி. தன் தந்தையின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துப் ”பெருமாள்முருகன்” என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதி வருகிறார். இளமுருகு என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தார். மனஓசை, குதிரைவீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி உள்ளார். கல்வி பற்றிய பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல்முற்றம் நாவல் போலிஷ் மொழியிலும் மாதொருபாகன் நாவல் ஜெர்மன் மொழியிலும் செக் மொழியிலும் வெளியாகியுள்ளன. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் மாதொரு

"சித்தாள் சாதி"-மேலாண்மை பொன்னுசாமி

படம்
மேலாண்மை பொன்னுசாமி உலகமே அவருடைய கிராமமாக இருந்தது ஐந்தாவது வரையில் மட்டுமே படித்து பெரிய இலக்கியவாதியாக உருவாக்கியவர் மேலாண்மை பொன்னுசாமி. சாகித்ய அகாடமி உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை வென்று புகழ் பெற்ற இலக்கியவாதியாக இருந்தும், கிராமத்தில் இருந்து வெளியேறி இன்னும் பெரிய மேடை மேடை அமைக்க கூடிய மதுரைக்கோ, சென்னைக்கோ குடியேறுவதை பொன்னுசாமி விரும்பவில்லை. தமது கிராமத்தில் வாழ்வதன் மூலமே ஒரு எழுத்தாளராக தமது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதாக அவர் கருதினார். எவ்வளவு மகத்தான எழுத்தாளர் என்ன அற்புதமான மனிதர் (1951 - 30 அக்டோபர் 2017) தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது. விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் பொன்னுசாமி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் வறுமையின் காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இவருக்கு 10 வயதானபோது தந்தை இறந்துவிட்டார். அப்போதே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். சகோதரர் கரிகாலனுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாகவே வச

மரப்பாச்சி - உமா மகேஸ்வரி`

படம்
  ·          உமா மகேஸ்வரி 1971 ஆம் ஆண்டு போடி நாயக்கனூரில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தனது பதின் வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கியவர். 1985 இல் கவிதை எழுதத் தொடங்கி , சிறுகதை , நாவல் என இலக்கிய உலகில் தமது தளத்தை உருவாக்கிக்கொண்டவர். நட்சத்திரங்களின் நடுவே( 1990), வெறும்பொழுது( 2002), கற்பாவை( 2004), என மூன்று கவிதைத் தொகுதிகளும் மரப்பாச்சி( 2002), தொலைகடல் ( 2004), அரளிவனம்( 2008) என்று மூன்று சிறுகதைத் தொகுதிகளும் யாரும் யாருடனும் இல்லை( 2003) என்ற நாவலும் இவருடைய ஆக்கங்களாகும். கதா விருது , திருப்பூர் தமிழ்ச் சங்க விருது , இந்தியா டுடேயின் சிகரம் விருது , ஏலாதி , கணையாழி , இலக்கியச் சிந்தனை , கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசு எனப் பல விருதுகளையும் பரிசு களையும் தமது ஆக்கங்களுக்காகப் பெற்றிருக்கிறார். ஆண்டிப்பட்டி யில் வசித்து வருகிறார். ·          மரப்பாச்சி தொடங்கி ரணகள்ளி வரை 14 கதைகள் மரப்பாச்சி தொகுதியிலும் மூடாதஜன்னல் முதல் தொலைகடல் வரை 14 கதைகள் தொலைகடல் தொகுதியிலும் அரளிவனம் முதற்கொண்டு கனகாம்பரத் திரைகள் வரை 14 கதைகள் அரளிவனம் தொகுதியிலு மாக 42 சிற

"ராட்சஸம்": கவிகோ அப்துல் ரகுமான்

படம்
கவிக்கோ என்று சொல்லப்படும் தமிழ் கவிஞர் அப்துல் ரஹ்மான் மதுரையில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையும் தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள் .கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று இலக்கண இலக்கியங்களைக் கற்று கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம் ,அரபி ,உருது ,பாரசீகம், இந்தி ,ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர் .இவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார் .இத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள் ,படிமங்கள் ,குறியீடுகள் , ஆகியவற்றின் வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ ,கஸல், ஆகிய பிற மொழி இலக்கியங்களை முனைந்ததிலும்,பரப்பியதிலும் ,இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். 1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்க கவிதைகளாலும் சிறப்பித்துள்ளார் சிலேடை வார்த்தைகளால் கேட்போரை கவர்வது இவரது பாணி வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் 20 ஆண்டுகள் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

-மனமாற்றம்" - முத்து விஜயன் .

படம்
  முத்து விஜயன் அவர்கள் , எந்த ஒப்பனையும் இல்லாத எளிய மனிதர்களின் வாழ்வென்பது வீதியிலிருந்து தொடங்கும். அவர்கள் சமூகத்திடம் வாழ்வியலை அன்பினாலே செய்துவிடுகிறார். அதிலும் குறிப்பாக மதுரையை பிறப்பிடமாகவும், கல்பாக்கத்தை வாழ்விடமாகவும் கொண்டு வாழ்ந்த படைப்பாளி முத்துவிஜயன். தற்சமயம் ஓய்வு பெற்று தன்னுடைய பிறந்த கிராமத்தில் தன்னுடைய பிறப்பிடத்தில் வாழ்கிறார்.. இவர் சமூக வலைத்தளங்கள் மற்றும் இலக்கிய உலகில் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். இவர் பதிவிடும் சிறுகதைகளை சுடச்சுட வாசிக்க ஒரு வாசகர் கூட்டமே காத்திருக்கும். மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தை கவிதைகளுக்கும் சிறுகதைகளுக்கும் இருமுறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது . .வாழ்க்கையின் விழிம்பு நிலை பக்கங்களை கதைப் பொருளாக எடுத்துக் கொண்டு, ஏன் என்று காரணம் தேடுகிறார், வாசகரையும் சிந்திக்க வைக்கிறார். சில கதைகள் நாவலுக்குரிய பரப்பாக இருப்பினும் சிறுகதை வடிவத்திற்குள் அடக்கி விடுவது, இவரது சிறப்பாகும். உறவுகளை பேணுதலும், உறவுகளைத் தொடருதலும் , மாறிவிட்ட இன்றைய காலத்தில் ஆண்

"பாலை மனம்"- -இந்துமதி

படம்
இந்துமதி அவர்களுக்கு நன்றியுடன் . இந்துமதி - தொலைக்காட்சி தொடர்கள் வருவதற்கு முன்பு, பிரபல பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகள்தான் பெண்களின் பெரும் பொழுதுபோக்கு. அப்படி தொடர் எழுதி, பெண்களின் மனதைக் கொள்ளையடித்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் எழுத்தாளர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் என இவரது எழுத்துலகப் பணி விரிகிறது. பலருக்கும் பிடித்தமான ஆதர்ச எழுத்தாளர் இவர். பலரும் சந்திக்க ஆசைப்பட்ட ஆளுமை. எழுத்துலகில் தன் நீண்ட நெடிய பயண அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டவை: தன்னைப்பற்றி நான் பார்த்த, கேட்ட, என்னை பாதித்த சம்பவங்கள்தான் என் கதைக்கருக்கள். என் மனதை பாதிக்காத அல்லது நெகிழ வைக்காத எதுவும் கதையாவதில்லை. வெறும் கற்பனைக் கதைகள் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள், சம்பவங்கள், நான் பழகிய மனிதர்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் என அவற்றைக் கொஞ்சம் கற்பனை கலந்து எழுதுகிறேன். ‘இதை எழுது எழுது’ என மனசு சொல்ல வேண்டும். அப்படி எழுதும்போதுதான் ஆத்மார்த்தமான எழுத்து வெளிவரும். பொற்கோவில் பிரச்னை வந்த போது, ஒரு சீக்கிய பையனை சிலர் துரத்திக்கொண்டு வந்

"மூமீன்" எழுதியவர் "சோபா சக்தி "

படம்
யாதும்ஊரே ,யாவரும் கேளிர் என்ற கொள்கையோடு வாழ்ந்த தமிழினம் , இன்று புலம்பெயர்ந்து படும் கஷ்டங்களையும் வேதனைகளையும் படம்பிடித்துக்காட்டுகிறார் தமிழ் ஈழ படைப்பாளி சோபா சக்தி .அவருடைய இந்த "மூமீன் "என்ற குறுநாவல் அருமையான படைப்பு .கடைசிவரை கேளுங்கள் . புலிகள் அமைப்பில் ஷோபாசக்தி இருந்தகாலத்தில் இயக்கத்தின் கருத்தியல் சார்ந்தே சில கவிதைகளை 1984–1986 காலப்பகுதிகளில் எழுதத் துவங்கினார். அவை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான 'ஈழமுரசு', 'செய்திக்கதிர்' போன்ற பத்திரிகைகளில் வெளியாகின. ஷோபாசக்தி நாடகங்கள் எழுதி நடத்தியிருக்கிறார். அவர் புலம் பெயர்ந்த பின்பாக 90களில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துடன் (சர்வதேச நான்காவது அகிலம்) இணைந்துசெயல்பட்ட காலத்தில் சர்வதேச முற்போக்கு இலக்கியமும் மார்க்ஸிச கற்கையும் அவருக்கு அறிமுகமாகின. 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஷோபாசக்தி என்ற புனைப்பெயரில் சிறுகதைகள், நாடகங்கள், ஈழ யுத்தத்தின் போது அவரது தனிப்பட்ட அனுபவங்கள், அரசியல் கட்டுரைகள் மற்றும் நாவல்கள் எழுதத் தொடங்கினார்பாரிஸிலிருந்து வெளியாகிய ‘அம்மா‘ மற்றும் ‘எக்ஸில்’ இதழ்களில் தொடர்ச

கிழித்த கோடு -கதையாசிரியர் மு.மேத்தா.

படம்
  மு. மேத்தா (Mu. Metha) (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.இவர் எழுதிய நூலான ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார். உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்கள

"அச்சக்காடு"-எழுதியது "கிருஷ்ணா டாவின்சி"

படம்
  மறைந்த கிருஷ்ணா டாவின்சி அவர்கள் . 2009ம் ஆண்டு எழுதிய இந்தக்கதை இன்று மிகவும் போருந்திப்போவது, ஆச்சரியமாக இருக்கிறது. இவரும்,அந்த டாவின்சிபோல், இந்த டாவின்சியும் தீர்க்கதரிசியா? என்று தோன்றுகிறது. எல்லோரையும் எல்லோருக்கும் பிடிக்காது. ஆனால் எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான கிருஷ்ணாவை அனைவருக்குமே பிடிக்கும். பத்திரிக்கை உலகில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறோம் என்பதையும் தாண்டி, மிகப்பெரிய எழுத்தாளர் என்பதையும் தாண்டி, அந்த சிரித்த முகம் நையாண்டித்தனமான பேச்சு என அனைவரையும் வசீகரிக்கும். கிருஷ்ணாவைப் போலவே அவரது எழுத்துக்களும் வசீகரமானவைதான். முதன்முதலில் மாலைமதியில் எழுதத்தொடங்கியது முதல் அவரது கடைசி புத்தகமாக ‘இசையானது’ வரை ஒவ்வொரு எழுத்துக்களும் ஆழமான கருத்துச் செறிவுகளை கொண்டவை. வெங்கடகிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட கிருஷ்ணா டாவின்சி (பிறப்பு: மே 7, 1968 இறப்பு: ஏப்ரல் 4, 2012) ஓர் இதழாளர், எழுத்தாளர், திரைப்பட உரையாடல் எழுதுநர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர். சுகந்தி என்னும் புனைப்பெயரில் கதைகள் எழுதிய தன் தந்தையைப் பார்த்து எழுத்தார்வம் கொண்டவர். பலதுறை அறிஞரான லியானர்

"அடையாளங்கள்" - தோப்பில் முஹம்மது மீரான்,

படம்
  “தோப்பில் முஹம்மது மீரான், தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத படைப்பாளி. இஸ்லாமிய குடும்ப வாழ்வை, பாசாங்கில்லாமல் பதிவுசெய்தவர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகங்கள் அவருக்கு உண்டு. மீரான் 1944-ல் கன்னியாகுமரியின் தேங்காய்ப்பட்டினத்தில் பிறந்தார். 1988-ல் வெளியான இவரது `ஒரு கடலோர கிராமத்தின் கதை' தோப்பில் முஹம்மது மீரான் என்ற அசலான படைப்பாளியை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தது. இயல்பு மாறாத இவரது வட்டார மொழிநடை, கைகளிலிருந்து நழுவி ஓடும் வழவழப்பான கடல்மீனையும் உப்புக்காற்றையும் வாஞ்சை குறையாது வாசகர்களுக்குச் சேர்த்தது. பெரும்பாலும் தனது நிலத்தைக் குறித்தே எழுதிய இவரின் படைப்புகளில் துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி போன்றவை முக்கியமானவை. 1997-ம் ஆண்டு தன்னுடைய `சாய்வு நாற்காலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். இதுவரை 6 நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் சிறுகதை, புதினம் எழுதினார். எழுத்தின் மீது இவர்கொண்ட காதலுக்கு, இவருடைய 73-ம் வயதிலும் எழுதி, கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த `குடியேற