இரண்டு குமிழ்கள் By எஸ்.ராமகிருஷ்ணன்.
https://www.youtube.com/watch?v=i3axPonImEQ எஸ் . ராமகிருஷ்ணன் ( பிறப்பு : ஏப்ரல் 13 , 1966 ) தற்காலத் தமிழ்ப் படைப்புலக எழுத்தாளர் . புதினங்கள் , சிறுகதைகள் , கட்டுரைகள் , நாடகங்கள் , குழந்தைகளுக்கான ஆக்கங்கள் , திரைக்கதை , திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு , தனது உரைகள் , பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள் , திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார் . சஞ்சாரம் என்னும் இவருடைய படைப்புக்கு 2018 சாகித்திய அகதெமி விருது இவருக்கு வழங்கப்பெற்றது . விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணற்றைச் சொந்த ஊராகக் கொண்ட இவரது பெற்றோர் சண்முகம் , மங்கையர்க்கரசி . இவரது தந்தைவழித் தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர் . தாய்வழித் தாத்தா சைவ சமயப் பற்றுடையவர் . இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள் , சமூகச் சிந்தனைகளைப் படித்தும் , பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார் . ஆங்கில இலக்கியம் பயின்று அதிலேயே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி இடையில் கைவிட்டிருக்கிறார் . இவரது முதல் கதையான "பழைய தண்டவாளம்&q