இடுகைகள்

CRIME STORY-சுஜாதாவின் "அஸ்திவாரம்"(தமிழ் க்ரைம் சிறுகதை)

படம்
தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் சுஜாதா. குற்றப் புனைகதை, அறிவியல் புனைகதை, இலக்கியப் புனைகதை, சிறுகதைகள், கட்டுரைகள், புனைகதை அல்லாதவை என பல வகைகளில் புத்தகங்களை எழுதினார். அவர் ஒரு உண்மையான ஆல்ரவுண்டராக இருந்தார். அவர் தமிழ் அறிவியல் புனைகதையின் நிறுவனர் அல்லது குறைந்த பட்சம் அதன் மிகவும் பிரபலமான விரிவுரையாளர். எல்லா வகையான கதைகளும் உள்ளன. சில ஆச்சரியமான முடிவுகளைக் கொண்டிருக்கின்றன, சில வாழ்க்கையில் போராடிய சிறிய மனிதர்களைப் பற்றியவை, ஆனால் இறுதியில் ஏதோ ஒரு வழியில் வெற்றி பெறுகின்றன, மற்ற கதைகள் அமைப்பு மற்றும் சமூகத்தால் நசுக்கப்பட்ட சிறிய மனிதர்களைப் பற்றியது. மனஅழுத்தத்தைப் பற்றிய ஓரிரு கதைகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. கடினமாக போராடி ஒவ்வொரு நாளும் கடக்க முயற்சிக்கும் பெண்களைப் பற்றிய கதைகள் உள்ளன, மேலும் வழக்கத்திற்கு மாறான வழிகளில் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் பெண்களைப் பற்றிய கதைகள் உள்ளன. (பெண்களில் ஒருத்தி, அவள் ஏன் ஒரு குறிப்பிட்ட தொழிலில் இருக்கிறாய் என்று கேட்டால், அவள் திமிர்பிடித்தவள் மற்றும் அவமதிப்புள்ளவள் என்பதால் தான் என்று பதிலளித்தார். சிறந்த கதாபாத்திரங்களி...

CRIME STORY-சுஜாதாவின் " மோதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்"( க்ரைம் குறு நாவல்).

படம்
எழுதுபவனுக்கு எந்த விசயத்தில் வேண்டுமானாலும் கதை கிடைக்கலாம் .ஆனால் எந்தக் கதை எழுதினாலும் அதற்குள் ஒரு செய்தி இருக்கவேண்டும்.படைப்பின் முக்கியமான கோட்பாடு இதுதான் .க்ரைம் கதைகள் என்றால் பொதுவில் அசைவமாக இருக்க வேண்டுமென்பது நியதியாகிப் போய்விட்டது.அதிலிரிந்து விடுபட்டு சற்று சாதுவாக செலுத்தவேண்டும் என்ற உத்தேசத்துடன் நெசவு செய்ய ஜனித்ததுதான் இந்த கதை. இதில்என்ன செய்தி கிடைத்தது என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் அன்புடன் சுஜாதா.  

CRIME STORY- சுஜாதாவின் "அட்டாக்" (க்ரைம் சிறுகதை )

படம்
  இந்த க்ரைம் சிறுகதை ,ஒரு நடந்த நிகழ்வின் , புனைவில் எழுதப்பட்டிருக்கிறது .சுஜாதாவின் கற்பனைக்கு அளவில்லை. அவரின் அறிவியல் புரிதலும் , முன்னோக்கிய எதிர்பார்ப்புகளும் ,பார்வைகளும் இந்த சிறு கதையில் வெளிப்படுகிறது .மேலும் ஒரு நல்ல படிப்பினையையும் சொல்கிறார் . நல்லவர் ,கட்டவர் என்று யாருமில்லை .வளர்ந்த சூழலும், சமூகமும்தான் காரணம் என்று சொல்லாமல் சொல்கிறார் . கடைசிவரை பாருங்கள் .சுஜாதாவின் ரசிகர்கள் மறக்காமல் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் .மேலும் உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் . உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். சுஜாதா அவர்களின் சிறு கதை ,நாவல்களுக்கு இந்த சேனலை பாருங்கள் . மற்றும் தமிழில் சிறந்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் .கி.ரா போன்றவர்களின் படைப்புகளும் தொடர்ந்து இந்த சேனலில் வெளிவரும் .உங்கள் ஆதரவு வேண்டும் .நன்றி .

CRIME NOVEL-சுஜாதாவின் "ஆயிரத்தில் இருவர்"(முழு நீள க்ரைம் மர்ம நாவல்)

படம்
கணேஷ்,வசந்த் ,இணை துப்பறியும் இந்த சுஜாதாவின் "ஆயிரத்தில் இருவர்" எப்போதும்போல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை . சுஜாதாவின் ரசிகர்களுக்கு மற்றொரு விருந்து . சமையலறை தீ விபத்தில் இறந்துபோன தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி கணேஷ் வஸந்திடம் உதவி கேட்டுவருகிறார் ஒரு பெரியவர். அவரது ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளை மீது வழக்கு தொடர வேண்டுகிறார். கணேஷ் அந்த வழக்கை எடுத்துக்கொள்ள முனையும்போது இடையில் ஏராள வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. இது சாதாரண வரதட்சணை விவகார வழக்கு இல்லை என்று கணேஷ் வஸந்த்யூகிக்கும்போது, மாமனாரும், மாப்பிள்ளையும் அவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளிக்கிறார்கள்.

CRIME STORY -TAMIL SHORT STORY -சுஜாதாவின் "கைது "(க்ரைம் சிறுகதை)

படம்
18">100 Hot Books</a> CRIME STORY-சுஜாதா அவர்கள் எழுதிய இந்த " கைது" சிறுகதை 14.07.1994 குமுதம் இதழில் வெளிவந்தது .அந்த காலகட்டத்திலும் இருந்த பெண்களுக்கெதிரான ,வன்முறைகளும் , கொடுமைகளும் இருந்த காலகட்டத்தில் ,மணிதம் நிலைத்திருக்க எழுதப்பட்ட கதை . கதை மிக எதார்த்தமாக செல்கிறது . எல்லாதுறைகளையும்போல் காவல்துறையிலும் நல்லவர்களும் ,கேட்டவர்களும் இருக்கிறார்கள் .கதையின் முடிவு கேளுங்கள் .உங்கள் அபிப்பிராயங்களை பின்னூட்டத்தில் எழுதுங்கள் .மறக்காமல் சிறந்த தமிழ் கதைகளுக்கு சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் .  

CRIME Story(Science Fiction)-சுஜாதாவின் "திவா"(க்ரைம் +அறிவியல் புனைவு)

படம்
இந்த க்ரைம் சிறுகதை ,அறிவியல் புனைவில் எழுதப்பட்டிருக்கிறது .சுஜாதாவின் கற்பனைக்கு அளவில்லை. அவரின் அறிவியல் புரிதலும் , முன்னோக்கிய எதிர்பார்ப்புகளும் ,பார்வைகளும் இந்த சிறு கதையில் வெளிப்படுகிறது .மேலும் ஒரு நல்ல படிப்பினையையும் சொல்கிறார் . கடைசிவரை பாருங்கள் .சுஜாதாவின் ரசிகர்கள் மறக்காமல் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் .மேலும் உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் . சுஜாதா அவர்களின் சிறு கதை ,நாவல்களுக்கு இந்த சேனலை பாருங்கள் . மற்றும் தமிழில் சிறந்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் .கி.ரா போன்றவர்களின் படைப்புகளும் தொடர்ந்து இந்த சேனலில் வெளிவரும் .உங்கள் ஆதரவு வேண்டும் .நன்றி .  

CRIME STORY-சுஜாதாவின் "தண்டனையும் குற்றமும்"

படம்
கணேஷும் வசந்தும் வழக்காடும் இந்த சுஜாதாஅவர்களின் கதை ,கடைசிவரை விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது .எதிர்பாராத முடிவு பற்றி உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் .மறக்காமல் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் .மேலும் சிறந்த கதைகள் தொடர்ந்து வெளிவரும் .  

CRIME NOVEL- சுஜாதாவின் "என்றாவது ஒரு நாள்"(முழு நீள க்ரைம் நாவல்)

படம்
சுஜாதா 1982-ல் எழுதிய நாவல். குறிக்கோள் ஏதுமின்றி குற்றங்களே பிழைப்பாக வாழ்க்கை நடத்துபவனின் போக்கில் மனத்துக்கு இதமாக குறிக்கிடுகிறாள் ஒரு பெண். புதிர் நிரம்பியவளாக வசீகரிக்கிறாள். அவளுக்காகவே தனது வாழ்க்கையை மாறுபட்டு வாழவேண்டும் எனக் கருதும்போது, செய்த குற்றங்களின் நிழல் அவனை விடாமல் துரத்துகிறது. தவிர அப்பெண்ணின் பின்னணியில் அவிழும் புதிர் எதிர்பாராத முடிவை நோக்கி நகர்த்துகிறது. மிகச் சிறந்த எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்களின் தலைசிறந்த எழுத்தோவியங்களில் ஒன்றான 'என்றாவது ஒரு நாள்' என்னும் இந்நூலில் ஒரே ஒரு கருத்தை மையமாக வைத்து ஆயிரம் கதைகள் உருவாக்கப்படுகின்ற நேரத்தில் ஆயிரம் கருத்துக்கள் இழையோட ஒரு அற்புதமான கதையைக் தந்திருக்கிறார் திரு.சுஜாதா. கண்ணெதிரே நாம் தினமும் சந்திக்கின்ற சம்பவங்கள் நெஞ்சை நெகிழவைக்கும் கதை வடிவம் பெற்றிருக்கின்றன. யதார்த்தங்கள் கதை வடிவம் பெறும்போது எளிதாக இதயத்தை அள்ளிக் கொள்கின்றன. 'என்றாவது ஒரு நாள்' கதையைப் படிக்கின்ற போது - நாமும் அந்தக் கதையில் ஒரு பாத்திரமாக மாறி அவர்களுடனேயே இருப்பதுபோல ஒன்றிவிட முடிகிறது. பாத்திரங்கள் - ...

CRIME STORY-சுஜாதாவின் "மறக்க முடியாத சிரிப்பு "

படம்
  தூண்டில் கதைகள் தொகுப்பில் வெளிவந்த இந்த கதைகள் குமுதம் வார இதழில் வந்த கதைகள் . இந்த மறக்கமுடியாத சிரிப்பும் அந்த தொகுப்பில் வந்ததாகும் . சுஜாதாவின் பாணியில் க்ரைம் த்ரில்லராக வந்திருக்கும் இந்த கதை ,சுஜாதாவின் மற்ற கதைகளைப்போல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாதது . தொடர்ந்து இந்த சேனலில் தமிழில் சிறந்த கதைகள் தொடர்ந்து வெளிவரும் .அவற்றில் சுஜாதாவின் கதைகள் முக்கிய இடம் பெரும் . தொடர்ந்து கதை கேட்கவிரும்புபவர்கள் பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.லைக் செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் .நல்ல கதைகள் படிக்க ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கு பார்வேர்ட் செய்யுங்கள் .

1:16 / 13:22 CRIME STORY-சுஜாதாவின்-ஓர் அரேபிய இரவு "

படம்
  அறுபதுகளில், சுஜாதாவின் புனைவுகளில், தமிழ் உரைநடை புதுத்தோற்றம் கொண்டு வாசகர்களை மிரளவைத்தது. மரபு எழுத்துப்பாணியிலேயே மயங்கிக் கிடந்த வாசகர்களை எழுந்து உட்கார வைத்தவர் சுஜாதா. அவரது மொழி, தமிழோடு ஆங்கிலம் கலந்த பேச்சுமொழி; கூடவே இளைஞர்களின் மொழியாகவும் அது அமைந்துவிட்டதால், இளம் வாசகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அரைத்த மாவையே திருப்பித் திருப்பி அரைக்கும் ஸ்டீரியோ டைப் எழுத்து ஸ்டைலை தூக்கிக் கடாசியவர் சுஜாதா. அந்த வகையில் தமிழ் உரைநடை வளர்ச்சியில் அவரது பங்கு அலட்சியப்படுத்த முடியாதது. அவரது காலகட்டத்தில், மரபுசார் எழுத்தாளர்கள், விமர்சகர்களின் தாக்குதல்கள் அவரைத் தொடர்ந்து கொண்டே இருந்தன. சளைக்காது அவற்றை அவர் இயல்பாக எதிர்கொண்டார். மனிதம் போற்றும் உன்னதமான கதைகளைக் கொண்ட இலக்கியப் பொக்கிஷம், ‘1001 அரேபிய இரவுகள்’. மேற்கத்திய இலக்கியம், சினிமா, இசை, ஓவியம் போன்ற துறைகளில் இக்கதைகள் செலுத்திய தாக்கம் அளப்பரியது. இவரின் இந்த ஓர் அரேபிய இரவு சிறுகதை மெல்லிய புன்னகையை வரவழைக்கிறது, Tamil Stories telling Channel. The Stories are written by well known Tamil and world writers. Par...

Feminism -தமிழ் கதை-வாசந்தியின் "நஞ்சு".

படம்
  சிசுக்கொலை- இந்தக் கதை ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னும் ஒரு பெண் இருந்தால், ஒவ்வொரு ஆசிர்வதிக்கப்பட்ட ஆணின் பின்னாலும் ஒரு மகள் இருக்கிறாள். மகள்கள் ஒருவரின் இதயத்தில் தூண்டும் உணர்வுகள் ஒப்பற்றவை; அவற்றை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, ஆனால் இதயத்தில் மட்டுமே உணர முடியும். ஆனாலும், இந்தியர்களான நாம் நம் கலாச்சாரத்தில் பெண் சிசுக்கொலையின் அவமானத்தையும் சாபத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும். பெண் கருக்கொலை என்பது இந்தியர்களாகிய நாம் ஒட்டுமொத்தமாக வெட்கப்பட வேண்டிய ஒரே விஷயம். ஒரே ஒரு பெண் கருவைக் கொல்லப்படும் வரை நாம் தலை நிமிர்ந்து வாழ முடியாது. இந்த அச்சுறுத்தலுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுமக்களின் பங்களிப்பு அதிகமாக தேவைப்படலாம். அந்த நோக்கத்துடன், பிறக்காத ஒரு பெண்ணின் அவலத்தையும் வேதனையையும் தெரிவிக்க முயற்சி இந்த வாசந்தி எழுதிய கதை.

Tamil Story -- தோப்பில் முஹம்மது மீரானின் "இரைகள்"தமிழ் கதைகள்

படம்
  amil Story தமிழ் சிறுகதை தோப்பில் முஹம்மது மீரானின் "இரைகள்" சாமானியனுக்கு கிட்டாத அவசர சிகிச்சை பற்றிய ஆதங்கத்தை வெளிகொண்டுவந்திருக்கிறார் எதார்த்தமாக . “தோப்பில் முஹம்மது மீரான், தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத படைப்பாளி. இஸ்லாமிய குடும்ப வாழ்வை, பாசாங்கில்லாமல் பதிவுசெய்தவர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகங்கள் அவருக்கு உண்டு. மீரான் 1944-ல் கன்னியாகுமரியின் தேங்காய்ப்பட்டினத்தில் பிறந்தார். 1988-ல் வெளியான இவரது `ஒரு கடலோர கிராமத்தின் கதை' தோப்பில் முஹம்மது மீரான் என்ற அசலான படைப்பாளியை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தது. இயல்பு மாறாத இவரது வட்டார மொழிநடை, கைகளிலிருந்து நழுவி ஓடும் வழவழப்பான கடல்மீனையும் உப்புக்காற்றையும் வாஞ்சை குறையாது வாசகர்களுக்குச் சேர்த்தது. பெரும்பாலும் தனது நிலத்தைக் குறித்தே எழுதிய இவரின் படைப்புகளில் துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி போன்றவை முக்கியமானவை. 1997-ம் ஆண்டு தன்னுடைய `சாய்வு நாற்காலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். இதுவரை 6 நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். மலை...

ஜெயகாந்தனின்" ரிஷி மூலம்"(அதிக விமர்சனத்துக்குள்ளான கதை)

படம்
 https://youtu.be/Smz3RrWcA-Q?si=08pojgoT97WGg6ss https://youtu.be/Smz3RrWcA-Q?si=08pojgoT97WGg6ss இந்த ரிஷி மூலம் என்கிற கதையை நான் மூன்று வாரம் தினமணி கதிரில் எழுதினேன்.அதன் பிறகு தினமணி கதிரில் வாசகர் கடிதம் ஒன்றைப் பிரசுரித்து,இனிமேல் இது போன்ற கதைகள் தினமணி கதிரில் பிரசுரிக்கப்பட மாட்டாது ‘ என்ற ஆசிரியர் குறிப்பும் வெளிவந்தது . அதனைத் தொடர்ந்து இந்த ரிஷி மூலம் கதையை ஆதரித்து நூற்றுக்கணக்கான கடிதங்கள் எனக்கும் கதிர் ஆசிரியருக்கும் வரலாயின .இப்போதுகூட இலக்கிய விமர்சனம் பயில்கிறவர்களாலும் வாசகர்வட்டாரத்திலும் இந்த ரிஷி மூலம் சமயம் கிட்டுகிற போதெல்லாம் விமர்சிக்கப்படுகிறது .இது பற்றியஎத்தனை விதமான அபிப்பிராயங்கள் உண்டோ அத்தனையையும் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் . இந்தக் கதையை எழுதியதன் மூலம் ஒரு நல்ல கதை எழுதி இருக்கிறேன் என்பதைத் தவிர நான் இந்தச் சமுதாயத்தை உயர்த்திவிட்டதாகவோ கேடுத்துவிட்டதாகவோ நம்பவில்லை. அப்படிப்பட்ட நோக்கங்கள் எதுவும் –கதை எழுதுகிறவன் என்ற முறையில் எனக்கு கிடையாது .இந்தச் சமூகத்தை உயர்த்துகிற பணியில் எல்லா மனிதருக்கும் என்ன பங்கு உண்டோ அந்தப்பங்கு எனக்கும் உ...

CRIME NOVEL-சுஜாதாவின் "இளமையில் கொல்"- (க்ரைம் தமிழ் முழு நாவல் )

படம்
 https://youtu.be/9ceD2xxqluw?si=ku1ieBYmmFnnHgwr இளமையில் கொல்' இந்த குறுநாவல் 1987 எழுதுப்பட்டது.சுஜாதா ' என்கிற மாத இதழில் வெளிவந்துள்ளது. சுஜாதா' என்றபெயர் பரவலாக அறியப்பட்டு ஏறக்குறைய ஒரு டிரேட் மார்க்' காக மாறிருந்த காலம்அது. மேகலா குங்குமச்சிமிழ் போன்ற பல பெயர்களுடன் மாத நாவல்கள் தழைத்த காலம். பேப்பர் வியாபாரிகள் நியூஸ்பிரிண்ட் கோட்டா கிடைப்பதற்காக மிச்சமுள்ள காகிதத்தைப் பயன்படுத்த நாவல்களாக அச்சடித்து வெளியிட்ட காலம். அப்போது ஹரிராமன் என்கிறவர் சுஜாதா ' என்கிற பெயரைப் பதிவு செய்துவிட்டார் . பெங்களூருக்கு வந்து என்னை வற்புறுத்திக் கேட்டதில் எழுதித் தந்த கதை இது. -சுஜாதா ரெங்கராஜன்

வழி தெரியவில்லை -த்ரில்லர் சிறுகதை -எழுதியது -சுஜாதா

படம்
சுஜாதாவின் கதை கடலில் மற்றொரு சிறுகதை முத்து .இந்த த்ரில்லர் கதையை கடைசிவரை பாருங்கள். சிறிய கதையான போதிலும் கடைசி வரியில் இருக்கிறது விடை  

"காரணம்" சிறுகதை எழுதியது -சுஜாதா

படம்
இன்னொரு சுஜாதாவின் கதை .ஒவ்வொரு கதையும் தகவல்களின் சுரங்கம். தகவல்கள் மட்டுமல்ல, நோகாதபடி அறிவுரைகள் . இந்த கதையில் பிள்ளைகளின் வளர்ச்சியில், ஆசிரியர்களும் பெற்றோரும் செய்யவேண்டியதை, கதையாக படம்காட்டியிருக்கிறார் .காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் .பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.அது நாங்கள் வெளியிடும் சிறந்த தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு உடனுக்குடன் அறிந்துகொள்ள உதவும். இதுபற்றிய விமர்சனங்களை பின்னூட்டத்தில் பதிவிடும்கள் . அவை மென் மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்க உதவும் .நன்றி .  

"இரண்டணா" - எழுதியவர் -சுஜாதா

படம்
1950 களில் இருந்த பணத்தின் மதிப்பையும் ,அன்றைய சூழளையும்,கதையாக்கி இருக்கிறார் சுஜாதா . எதார்த்தமாகவும் ,அதை நகைச்சுவையுடன் கையாள்வதற்கு சுஜாதாவுக்கு நிகர் அவரே . இந்த சிறுகதை தரும் உணர்வுகளை முழுமையாக அனுபவித்தேன். நானும் திருச்சியில் வாழ்தவந்தானே .சுதந்திரத்திற்கு முன் பிறக்கவில்லை என்றாலும் அணா காலத்தில் வாழ்ந்திருக்கிறேன் . மிக அருமையாக எழுதப்பட்ட சிறுகதை . கடைசிவரை படியுங்கள் . பிடித்திருந்தால் மறக்காமல் பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் . உங்கள் விமர்சனங்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் .நன்றி .  

மகன் தந்த பரிசு-எழுதியவர் -: முனைவர் க.லெனின்

படம்
  கதையாசிரியர்:   முனைவர் க.லெனின் ( குறிப்பு: இது தன்னைத்தானே உயிரை மாய்த்து( suicide) கொள்ளும் ஒருவருடைய கதை , இந்த வகை கதைகளை படிக்க விரும்பாதவர்கள் வேறு கதைக்கு செல்லவும்)   இந்த சேனலில் தமிழில் சிறந்த சிறுகதைகளை காணொளியாக கேளுங்கள். மறக்காமல் சப்ஸ்க்ரைப்செய்து , உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். 1) அப்பத்தாவும் , ஆண்ட்ராய்டு போனும் ” எழுதியது அ.முத்துவிஜயன். https://www.youtube.com/watch?v=BM6G-.. . 2) மிலேச்சன் ' எழுதியவர் "அம்பை" https://www.youtube.com/watch?v=yBGIM.. . 3) இரவின் காலடி ஓசை" , எழுதியவர்-"மாதவி குட்டி. https://www.youtube.com/watch?v=SamUU.. . 4) " அப்பா மகள்" எழுதியது ப்ரியா தம்பி https://www.youtube.com/watch?v=roq2R.. . 5) மளுவானயும் ரம்புட்டான் தோட்டங்களும் எழுதியது ஹமீது தம்பி https://www.youtube.com/watch?v=LH6eL.. . 6) " விடுதலை" எழுதியவர் வாஸந்தி https://www.youtube.com/watch?v=Hu22k.. . 7) " விபத்து": எழுதியவர் " இன்குலாப்" https://www.youtube.com/watch?v=a-FdR.....

விரிசல்-எழுதியவர்-எம்.ஏ.சுசீலா

படம்
இது செட்டிநாட்டடை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட கதை .அந்த சூழலை தன பேனாவால் படம்பிடுத்து காட்டுகிறார் .கடைசிவரை பாருங்கள். எம்.ஏ.சுசீலா, மதுரை- பாத்திமாக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர். 1979ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப்போட்டியில் இவரது’ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் ஆக்கம்,முதற்பரிசு பெற, இவர் அறிமுக எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றார். தொடர்ந்து தொண்ணூறுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகளும்,கட்டுரைகளும் பல வார மாத இதழ்களில் வெளி வந்துள்ளன; இவரது சில கதைகள், மலையாளம்,கன்னடம் இந்தி,,வங்காளம்,ஆங்கிலம்,ஃப்ரெஞ்ச்முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக,கல்லூரிப்பாடத் திட்டங்களிலும் இவரது நூல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த சேனலில் தமிழில் சிறந்த சிறுகதைகளை காணொளியாக கேளுங்கள். மறக்காமல் சப்ஸ்க்ரைப்செய்து ,உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். 1)அப்பத்தாவும், ஆண்ட்ராய்டு போனும்” எழுதியது அ.முத்துவிஜயன். https://www.youtube.com/watch?v=BM6G-.. . 2) மிலேச்சன்' எழுதியவர் "அம்பை...

"கதவு" -எழுதியவர்-கி.ராஜநாராயணன்.

படம்
“வாய்மொழி வரலாற்றைப் பொது வரலாறு ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதை மாற்றித் தனது படைப்புகளின் வழியே வாய்மொழி வரலாற்றின் உண்மைகளை வரலாற்றின் சாட்சியங்களாக மாற்றினார் கி.ரா. ‘ ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., இந்த சேனலில் தமிழில் சிறந்த சிறுகதைகளை காணொளியாக கேளுங்கள். மறக்காமல் சப்ஸ்க்ரைப்செய்து ,உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். 1)அப்பத்தாவும், ஆண்ட்ராய்டு போனும்” எழுதியது அ.முத்துவிஜயன். https://www.youtube.com/watch?v=BM6G- ... 2) மிலேச்சன்' எழுதியவர் "அம்பை" https://www.youtube.com/watch?v=yBGIM ... 3) இரவின் காலடி ஓசை",எழுதியவர்-"மாதவி குட்டி. https://www.youtube.com/watch?v=SamUU ... 4) "அப்பா மகள்" எழுதியது ப்ரியா தம்பி https://www.youtube.com/watch?v=roq2R ... 5) மளுவானயும் ரம்புட்டான் தோட்டங்களும் எழுதியது ஹமீது தம்பி https://www.youtube.com/watch?v=LH6eL ... 6) " விடுதலை" எழுதியவர் வாஸ...