· உமா மகேஸ்வரி 1971 ஆம் ஆண்டு போடி நாயக்கனூரில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தனது பதின் வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கியவர். 1985 இல் கவிதை எழுதத் தொடங்கி , சிறுகதை , நாவல் என இலக்கிய உலகில் தமது தளத்தை உருவாக்கிக்கொண்டவர். நட்சத்திரங்களின் நடுவே( 1990), வெறும்பொழுது( 2002), கற்பாவை( 2004), என மூன்று கவிதைத் தொகுதிகளும் மரப்பாச்சி( 2002), தொலைகடல் ( 2004), அரளிவனம்( 2008) என்று மூன்று சிறுகதைத் தொகுதிகளும் யாரும் யாருடனும் இல்லை( 2003) என்ற நாவலும் இவருடைய ஆக்கங்களாகும். கதா விருது , திருப்பூர் தமிழ்ச் சங்க விருது , இந்தியா டுடேயின் சிகரம் விருது , ஏலாதி , கணையாழி , இலக்கியச் சிந்தனை , கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசு எனப் பல விருதுகளையும் பரிசு களையும் தமது ஆக்கங்களுக்காகப் பெற்றிருக்கிறார். ஆண்டிப்பட்டி யில் வசித்து வருகிறார். · மரப்பாச்சி தொடங்கி ரணகள்ளி வரை 14 கதைகள் மரப்பாச்சி தொகுதியிலும் மூடாதஜன்னல் முதல் தொலைகடல் வரை 14 கதைகள் தொலைகடல் தொகுதியிலும் ...
சந்திரா தங்கராஜ் சென்னைக்கு வந்து 27 ஆண்டுகள் ஆகின்றன. பத்திரிக்கையாளர் பின் திரைப்படத்துறை என்றெல்லாம் இத்தனை ஆண்டுகள் பயணித்தாலும், பிறந்த ஊரான தேனி மாவட்டத்தின் கூடலூரை இன்னும் சுமந்து கொண்டிருப்பது, இந்தக் கதைகளை வாசிக்கையில் தெரிகிறது. சோளம் மற்றும் பூனைகள் இல்லாத வீடு என்ற தொகுதிகளில் வெளிவந்திருக்கும் இந்த கதை, கி ராமகிருஷ்ணன் அவர்களின் தமிழில் சிறந்த 100 சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.பூனைகள் இல்லாத வீடு, ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ந்து ஒவ்வொருவராக வெளியேறி முற்றத்தை வெற்றிடமாக்கி போவதை சொல்வதுடன் முடிவதில்லை. கதைக்குள் கதையாக பெரியம்மா குடும்பத்தின் கதையும் இருக்கிறது. ஒரு சிறுவனின் பார்வையில் நகரும் கதையில் காலம் அவனது வளர்ச்சியை போலவே வேகமாக கடந்து செல்கிறது. ஒரு கூரையின் கீழ் அடித்துக்கொண்டும், கொஞ்சிக் கொண்டும் வாழ்ந்தவர்கள், இனி அவரவர் வாழ்க்கையை வாழப் போவதை எந்த ஆரவாரமும் இல்லாமல் சொல்லி பிரதான கதை நகர்ந்து முடிகிறது. ஆனால் கிளை கதையில் முக்கியமான ஒரு விஷயத்தை மறைத்து வைத்திருக்கிறார் சந்திரா. பூனைகள் என்பது குறியீடு இந்தத் தொகுப்புகளை மூன்று வ...
சுஜாதா 1982-ல் எழுதிய நாவல். குறிக்கோள் ஏதுமின்றி குற்றங்களே பிழைப்பாக வாழ்க்கை நடத்துபவனின் போக்கில் மனத்துக்கு இதமாக குறிக்கிடுகிறாள் ஒரு பெண். புதிர் நிரம்பியவளாக வசீகரிக்கிறாள். அவளுக்காகவே தனது வாழ்க்கையை மாறுபட்டு வாழவேண்டும் எனக் கருதும்போது, செய்த குற்றங்களின் நிழல் அவனை விடாமல் துரத்துகிறது. தவிர அப்பெண்ணின் பின்னணியில் அவிழும் புதிர் எதிர்பாராத முடிவை நோக்கி நகர்த்துகிறது. மிகச் சிறந்த எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்களின் தலைசிறந்த எழுத்தோவியங்களில் ஒன்றான 'என்றாவது ஒரு நாள்' என்னும் இந்நூலில் ஒரே ஒரு கருத்தை மையமாக வைத்து ஆயிரம் கதைகள் உருவாக்கப்படுகின்ற நேரத்தில் ஆயிரம் கருத்துக்கள் இழையோட ஒரு அற்புதமான கதையைக் தந்திருக்கிறார் திரு.சுஜாதா. கண்ணெதிரே நாம் தினமும் சந்திக்கின்ற சம்பவங்கள் நெஞ்சை நெகிழவைக்கும் கதை வடிவம் பெற்றிருக்கின்றன. யதார்த்தங்கள் கதை வடிவம் பெறும்போது எளிதாக இதயத்தை அள்ளிக் கொள்கின்றன. 'என்றாவது ஒரு நாள்' கதையைப் படிக்கின்ற போது - நாமும் அந்தக் கதையில் ஒரு பாத்திரமாக மாறி அவர்களுடனேயே இருப்பதுபோல ஒன்றிவிட முடிகிறது. பாத்திரங்கள் - ...
கருத்துகள்
கருத்துரையிடுக