1:16 / 13:22 CRIME STORY-சுஜாதாவின்-ஓர் அரேபிய இரவு "
அறுபதுகளில், சுஜாதாவின் புனைவுகளில், தமிழ் உரைநடை புதுத்தோற்றம் கொண்டு வாசகர்களை மிரளவைத்தது. மரபு எழுத்துப்பாணியிலேயே மயங்கிக் கிடந்த வாசகர்களை எழுந்து உட்கார வைத்தவர் சுஜாதா. அவரது மொழி, தமிழோடு ஆங்கிலம் கலந்த பேச்சுமொழி; கூடவே இளைஞர்களின் மொழியாகவும் அது அமைந்துவிட்டதால், இளம் வாசகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அரைத்த மாவையே திருப்பித் திருப்பி அரைக்கும் ஸ்டீரியோ டைப் எழுத்து ஸ்டைலை தூக்கிக் கடாசியவர் சுஜாதா. அந்த வகையில் தமிழ் உரைநடை வளர்ச்சியில் அவரது பங்கு அலட்சியப்படுத்த முடியாதது. அவரது காலகட்டத்தில், மரபுசார் எழுத்தாளர்கள், விமர்சகர்களின் தாக்குதல்கள் அவரைத் தொடர்ந்து கொண்டே இருந்தன. சளைக்காது அவற்றை அவர் இயல்பாக எதிர்கொண்டார். மனிதம் போற்றும் உன்னதமான கதைகளைக் கொண்ட இலக்கியப் பொக்கிஷம், ‘1001 அரேபிய இரவுகள்’. மேற்கத்திய இலக்கியம், சினிமா, இசை, ஓவியம் போன்ற துறைகளில் இக்கதைகள் செலுத்திய தாக்கம் அளப்பரியது. இவரின் இந்த ஓர் அரேபிய இரவு சிறுகதை மெல்லிய புன்னகையை வரவழைக்கிறது,Tamil Stories telling Channel. The Stories are written by well known Tamil and world writers. Particularly this channel is for the people who are interested in reading Tamil stories,who have no time to read. https:// / @user-gh1xw7ew9u
கருத்துகள்
கருத்துரையிடுக