Tamil Story -- தோப்பில் முஹம்மது மீரானின் "இரைகள்"தமிழ் கதைகள்


 amil Story தமிழ் சிறுகதை தோப்பில் முஹம்மது மீரானின் "இரைகள்"

சாமானியனுக்கு கிட்டாத அவசர சிகிச்சை பற்றிய ஆதங்கத்தை வெளிகொண்டுவந்திருக்கிறார் எதார்த்தமாக . “தோப்பில் முஹம்மது மீரான், தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத படைப்பாளி. இஸ்லாமிய குடும்ப வாழ்வை, பாசாங்கில்லாமல் பதிவுசெய்தவர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகங்கள் அவருக்கு உண்டு. மீரான் 1944-ல் கன்னியாகுமரியின் தேங்காய்ப்பட்டினத்தில் பிறந்தார். 1988-ல் வெளியான இவரது `ஒரு கடலோர கிராமத்தின் கதை' தோப்பில் முஹம்மது மீரான் என்ற அசலான படைப்பாளியை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தது. இயல்பு மாறாத இவரது வட்டார மொழிநடை, கைகளிலிருந்து நழுவி ஓடும் வழவழப்பான கடல்மீனையும் உப்புக்காற்றையும் வாஞ்சை குறையாது வாசகர்களுக்குச் சேர்த்தது. பெரும்பாலும் தனது நிலத்தைக் குறித்தே எழுதிய இவரின் படைப்புகளில் துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி போன்றவை முக்கியமானவை. 1997-ம் ஆண்டு தன்னுடைய `சாய்வு நாற்காலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். இதுவரை 6 நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் சிறுகதை, புதினம் எழுதினார். எழுத்தின் மீது இவர்கொண்ட காதலுக்கு, இவருடைய 73-ம் வயதிலும் எழுதி, கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த `குடியேற்றம்' புதினமே சாட்சி. மீரானின் நண்பரும், சக எழுத்தாளருமான சோ.தர்மன், தோப்பில் முஹம்மது மீரான் பற்றி ``இஸ்லாமிய வாழ்வியலில் உள்ள பல்வேறு பிரச்னைகளை வெளி உலகுக்குத் தெரியாத அவர்களின் வழக்கங்களை தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தியதில் மீரானுக்குப் பெரும்பங்கு உண்டு. அவருடைய படைப்புகள் அனைத்தும் இஸ்லாமியச் சமூகம் குறித்து நமக்குக் கிடைத்த மிகப்பெரும் ஆவணங்கள். சாகித்திய அகாடமி போன்ற விருதுகளைப் பெற்றவர், அகாடமி தேர்வுக் குழுவிலும், பாடநூல் தேர்வுக் குழுவிலும் இருந்தவர். பல விருதுகளும் பொறுப்புகளும் பெற்றபோதும் எளிமையாய் இருந்த இனிய மனிதர். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். என் போன்ற பல சின்ன எழுத்தாளர்களுக்கு அவர் ஒரு நல்ல வழிகாட்டி. அவர் வீட்டில் அனைவருமே வெகு இயல்பாய்ப் பழகக்கூடியவர்கள். கடல்சார் மக்களின் கண்ணீரை, புன்னகையை, அவர்தம் பாடுகளைத் தூண்டில்கொண்டு பிடிக்காமல், வலைகொண்டு மொத்தமாய் அள்ளி எழுத்துகளாக்கியவர் தோப்பில் முஹம்மது மீரான். அவர்தம் கதைகளைப்போல அவரின் கடலும் வானமும் சந்தித்துக்கொள்ளும் அந்த நெடுந்தொலைவில், தனது `சாய்வு நாற்காலி' யில் அமர்ந்தபடி மீரான் ஓர் எளியவனின் கதையை எழுதிக்கொண்டுதானிருப்பார் என்றார் தர்மன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Fyodor Dostoevsky

பச்சைக் கனவு-லா. ச. ராமாமிர்தம்

"அச்சக்காடு"-எழுதியது "கிருஷ்ணா டாவின்சி"