ஜெயகாந்தனின்" ரிஷி மூலம்"(அதிக விமர்சனத்துக்குள்ளான கதை)

 https://youtu.be/Smz3RrWcA-Q?si=08pojgoT97WGg6ss

இந்த ரிஷி மூலம் என்கிற கதையை நான் மூன்று வாரம் தினமணி கதிரில் எழுதினேன்.அதன் பிறகு தினமணி கதிரில் வாசகர் கடிதம் ஒன்றைப் பிரசுரித்து,இனிமேல் இது போன்ற கதைகள் தினமணி கதிரில் பிரசுரிக்கப்பட மாட்டாது ‘ என்ற ஆசிரியர் குறிப்பும் வெளிவந்தது . அதனைத் தொடர்ந்து இந்த ரிஷி மூலம் கதையை ஆதரித்து நூற்றுக்கணக்கான கடிதங்கள் எனக்கும் கதிர் ஆசிரியருக்கும் வரலாயின .இப்போதுகூட இலக்கிய விமர்சனம் பயில்கிறவர்களாலும் வாசகர்வட்டாரத்திலும் இந்த ரிஷி மூலம் சமயம் கிட்டுகிற போதெல்லாம் விமர்சிக்கப்படுகிறது .இது பற்றியஎத்தனை விதமான அபிப்பிராயங்கள் உண்டோ அத்தனையையும் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் .
இந்தக் கதையை எழுதியதன் மூலம் ஒரு நல்ல கதை எழுதி இருக்கிறேன் என்பதைத் தவிர நான் இந்தச் சமுதாயத்தை உயர்த்திவிட்டதாகவோ கேடுத்துவிட்டதாகவோ நம்பவில்லை. அப்படிப்பட்ட நோக்கங்கள் எதுவும் –கதை எழுதுகிறவன் என்ற முறையில் எனக்கு கிடையாது .இந்தச் சமூகத்தை உயர்த்துகிற பணியில் எல்லா மனிதருக்கும் என்ன பங்கு உண்டோ அந்தப்பங்கு எனக்கும் உண்டு .எல்லோரையும் மாதிரி நானும் ஒரு கூடை மண் கொட்டவோ,ஒட்டுப்போடவோ தயார் . அந்தப்பணிக்கான எனது பங்கை மறுக்க நான் கதை எழுதுவதை ஒரு சாக்காகப் பயன்படுத்தி ஒதுங்குவது நியாயமாகாது .
நான் ஐந்தாண்டுத் திட்டங்களுக்குப் பிரசார பிரசுரங்கள் எழுத வேண்டுமானால் அதையும் மகிழ்ச்சியுடன் செய்வேன். ஆனால் அது வேறு ; கதை எழுதுவது வேறு . நான் பல சந்தர்ப்பங்களில் கூறியவற்றைதான் மறுபடியும் இங்கே நினைவூட்டுகிறேன்.
நான் கண்டதை –அதாவது உலகத்தால் எனக்குக் காட்டப்பட்டதை, நான் கேட்டதை –அதாவது வாழ்க்கைஎனக்கு சொன்னதை நான் உலகத்துக்குத் திரும்பவும் காட்டுகிறேன். அதையே திரும்பவும் உங்களுக்கு சொல்லுகிறேன்.அது அசிங்கமாக ,ஹு அற்பமாக, அது கேவலமாக அல்லது உயர்வாக ,உன்னதமாக எப்படி இருந்த போதிலும் எனக்கென்ன பழி? அல்லது புகழ்?
எனது முதல் சிறுகதை தொகுதி முன்னுரையில்-நான் ஒரு கம்யுனிஸ்டாக இருந்த காலத்திலேயே மேலே கண்டவாறு எழுதி இருக்கிறேன் .
எதோ நான் திசை மாறிவிட்டதாகவும் வழி தவறிவிட்டதாகவும் என் பின்னால் வருகின்ற சில பேர் கூக்குரலிடுகிரார்கள்.பெருந்தன்மை காரணமாகவோ எனது வேலையில் நான் முனைந்திருக்கையில் எற்பபடுகின்ற அலட்சியம் காரணமாகவோ ,நான் இவர்களுக்குப்
பதில் சொல்லாமலும் , சரி அப்படியே வைத்துக்கொள்! என்கிற அலுப்போடும் மௌனமாயிருந்தது உண்டு .
நான் எந்தக் கொள்கைக்கும் எந்தக் கூட்டத்துக்கும் எப்போதும் தாலி காட்டிக்கொண்டதில்லை .
ரிஷி மூலம் கதையினால் சோஷலிசத்திற்குஎன்ன லாபம் என்று கேட்கிறார்கள் .
பாலுணர்ச்சிப் பிரட்சினைகளை அடிப்படையாகக்கொண்டு நான் கதை எழுதுகிறேன் என்பது இன்னொரு தாக்குதல்.
பாலுணர்ச்சிப் பிரச்சினை என்பது வெறும் படுக்கை அறைப் பிரச்சினை அல்ல .அதுவும்கூட ஒரு சமுதாயப் பிரட்சினைதான் .
-ஜெயகாந்தன்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Fyodor Dostoevsky

பச்சைக் கனவு-லா. ச. ராமாமிர்தம்

"அச்சக்காடு"-எழுதியது "கிருஷ்ணா டாவின்சி"