CRIME NOVEL- சுஜாதாவின் "என்றாவது ஒரு நாள்"(முழு நீள க்ரைம் நாவல்)
சுஜாதா 1982-ல் எழுதிய நாவல். குறிக்கோள் ஏதுமின்றி குற்றங்களே பிழைப்பாக வாழ்க்கை நடத்துபவனின் போக்கில் மனத்துக்கு இதமாக குறிக்கிடுகிறாள் ஒரு பெண். புதிர் நிரம்பியவளாக வசீகரிக்கிறாள். அவளுக்காகவே தனது வாழ்க்கையை மாறுபட்டு வாழவேண்டும் எனக் கருதும்போது, செய்த குற்றங்களின் நிழல் அவனை விடாமல் துரத்துகிறது. தவிர அப்பெண்ணின் பின்னணியில் அவிழும் புதிர் எதிர்பாராத முடிவை நோக்கி நகர்த்துகிறது.
மிகச் சிறந்த எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்களின் தலைசிறந்த எழுத்தோவியங்களில் ஒன்றான 'என்றாவது ஒரு நாள்' என்னும் இந்நூலில் ஒரே ஒரு கருத்தை மையமாக வைத்து ஆயிரம் கதைகள் உருவாக்கப்படுகின்ற நேரத்தில் ஆயிரம் கருத்துக்கள் இழையோட ஒரு அற்புதமான கதையைக் தந்திருக்கிறார் திரு.சுஜாதா.
கண்ணெதிரே நாம் தினமும் சந்திக்கின்ற சம்பவங்கள் நெஞ்சை நெகிழவைக்கும் கதை வடிவம் பெற்றிருக்கின்றன.
யதார்த்தங்கள் கதை வடிவம் பெறும்போது எளிதாக இதயத்தை அள்ளிக் கொள்கின்றன.
'என்றாவது ஒரு நாள்' கதையைப் படிக்கின்ற போது - நாமும் அந்தக் கதையில் ஒரு பாத்திரமாக மாறி அவர்களுடனேயே இருப்பதுபோல ஒன்றிவிட முடிகிறது.
பாத்திரங்கள் - சம்பவங்கள் - கதை எல்லாமே சமுதாயத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
குற்றங்கள் யாரால் பிறக்கின்றன?
குற்றவாளிகள் எப்படி உருவாகிறார்கள்? என்பனவற்றை எளியநடையில், ஆனால், அழுத்தமான சம்பவங்களால் சுட்டிக்காட்டி அவைகட்குப் பரிகாரம் காண வேண்டும் என்கிற வருத்தத்துடிப்பு படிப்பவர்கட்கு ஏற்படும் வகையில் திரு.சுஜாதா அற்புதமாக உருவாக்கியுள்ள 'என்றாவது ஒருநாள்' கதை
கருத்துகள்
கருத்துரையிடுக