இடுகைகள்

வைக்கம் முஹம்மது பஷீரின் "பால்யகால சகி"

படம்
  கதை சொல்கிறேன். ANALYTICS EDIT VIDEO இது ஒரு முழு நாவல் . பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட புனைகதை ‘பால்யகால சகி’. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக் கூடியதாகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷீரை மலையாளப் படைப்பாளிகளில் ‘உம்மிணி வலிய ஓர் ஆளாக’ - இன்னும் பெரிய ஒருவராக - ஆக்குகிறது. ‘பால்யகால சகி’க்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனால்தான். முழுமையாக பாருங்கள் . மறக்காமல் பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் . உங்கள் கருத்துக்களையும் ,உங்கள் விருப்பங்களையும் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் . இதுபோன்ற முழு நாவல்களும் ,குறு நாவல்களும் ,சிறுகதைகளும் இந்த சேனலில...

"அப்பா புகைக்கிறார்" எழுதியது எஸ்.ராமகிருஷ்ணன்

படம்
"அப்பா புகைக்கிறார்" எழுதியது எஸ்.ராமகிருஷ்ணன்   "அப்பா புகைக்கிறார்" எழுதியது எஸ்.ராமகிருஷ்ணன் 0 DISLIKE SHARE SAVE கதை சொல்கிறேன். ANALYTICS EDIT VIDEO சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர். அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி. கடந்த முப்பது ஆண்டுகாலமாகச் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். எனது சிறுகதைகள், கட்டுரைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம் பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளன. இந்தியா முழுவதும் சுற்றியலைந்தவர். அவரது இந்தியா மறைக்கபட்ட இந்தியா என இரண்டு வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார். உலக இலக்கியம் மற்றும் உலக சினிமா குறித்து விரிவான உரைகள் நிகழ்த்திருக்கிறார். இது முன்னோடியான நிகழ்வு. 2018ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார். இவரது சஞ்சாரம் நாவலுக்காக இந்த விருது அளிக்கபட்டது. இவரது புத்தகங்களை ஆராய்ந்து இ...

இரண்டு குமிழ்கள் By எஸ்.ராமகிருஷ்ணன்.

படம்
https://www.youtube.com/watch?v=i3axPonImEQ   எஸ் . ராமகிருஷ்ணன்   ( பிறப்பு :   ஏப்ரல் 13 ,  1966 ) தற்காலத் தமிழ்ப் படைப்புலக எழுத்தாளர் . புதினங்கள் , சிறுகதைகள் , கட்டுரைகள் , நாடகங்கள் , குழந்தைகளுக்கான ஆக்கங்கள் , திரைக்கதை , திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு , தனது உரைகள் , பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள் , திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார் .   சஞ்சாரம்   என்னும் இவருடைய படைப்புக்கு  2018  சாகித்திய அகதெமி விருது   இவருக்கு வழங்கப்பெற்றது . விருதுநகர் மாவட்டத்தில்   உள்ள   மல்லாங்கிணற்றைச்   சொந்த ஊராகக் கொண்ட இவரது பெற்றோர் சண்முகம் , மங்கையர்க்கரசி . இவரது தந்தைவழித் தாத்தா   திராவிட இயக்கத்தில்   பற்றுடையவர் . தாய்வழித் தாத்தா   சைவ சமயப்   பற்றுடையவர் . இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள் , சமூகச் சிந்தனைகளைப் படித்தும் , பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார் . ஆங்கில இலக்கியம் பயின்று அதிலேயே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத்...

மளுவானயும் ரம்புட்டான் தோட்டங்களும்

படம்
மளுவானயும் ரம்புட்டான் தோட்டங்களும் கதை சொல்கிறேன்-25 மளுவானயும் ரம்புட்டான் தோட்டங்களும் BY ஹமீது தம்பி இந்த கதை "மலுவானையும் ரம்புட்டான் தோட்டங்களும் " நான் எழுதியது .இது 2022 பிப்ரவரி கணையாழி இதழில் வெளிவந்தது .இந்த கதை ஓர் உண்மைக்கதை. இது 1950-60 களில் நடந்தது .என்னோடு வாழ்ந்த ஒரு சாமானியனின் கதை . சேது பூமியும் ,இலங்கையும் ஒரே நாடுபோல் இருந்த காலம் . அது விடுதலைப்புலிகளின் போராட்டங்களுக்கு முந்தைய காலகட்டம் . தொடர்ந்து இந்த சேனலில் தமிழில் சிறந்த சிறு கதைகள் ,குறு நாவல்கள்', வெளிவரும் .தொடர்ந்து பாருங்கள் . மறக்காமல் பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் . உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் .நன்றி ஹமீது தம்பி .

"ஒரு மனுசி" By பிரபஞ்சன். கதை சொல்கிறேன்-24

படம்
"ஒரு மனுசி" By பிரபஞ்சன். கதை சொல்கிறேன்-24 பிரபஞ்சன் பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். இவரது தந்தை ஒரு கள்ளுக்கடை வைத்திருந்தார். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். 1961ல், இவரது முதல் சிறுகதை என்ன உலகமடா பரணி என்ற இதழில் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இதுவரை 46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார். 1995ல் இவரது வரலாற்றுப் புதினம் வானம் வசப்படும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இப்பபுதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. இவரது படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாடகமான முட்டை தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான நேற்று மனிதர்கள் பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது. சாமானிய...

"இரவின் காலடி ஓசை"

படம்
  கமலா தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுரைiயா என்ற மாதவிக்குட்டி, (மார்ச் 31, 1934 - மே 31, 2009) ஓர் இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை. கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' (தற்போது திருச்சூர் மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை வி.எம்.நாயர், மாத்ருபூமி என்ற மலையாள தினசரி செய்திதாள் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார். தாயார் நலபாத் பாலாமணி அம்மா புகழ்பெற்ற மலையாள கவிஞர் ஆவார். கமலா ஓர் பாரம்பரிய இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தவர்.[4] ஆனால் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாம் மாதத்திற்கு மாறினார். தனது பெயரை கமலா சுரையா என்று மாற்றிக்கொண்டார். கமலா பெரும்பாலும் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிவந்தார். இவரின் முதல் 'கல்கத்தாவில் கோடைகாலம்' 1965 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை தொடர்ந்து 'வம்சத்தவர்' என்ற தொகுப்பு 1967 ஆம் ஆண்டு வெளிவந்தது இது பெண்கள் மத்தியி...

"அழிவற்றது"

படம்
  அசோகமித்திரன் (செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017) தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். 1996-இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஐதராபாத்தைக் கதைக்களமாகக் கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துகளை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்து உண்டு.இவர் 2017 மார்ச்சு 23 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தன் மகன் வீட்டில் 86 ஆம் அகவையில் இறந்தார். இந்த கதையின் களம், சென்னை அல்லது ஐதராபாத் இரண்டும் இல்லை .அமெரிக்காவில் உள்ள சிறிய நகரம் . கதையை கடைசிவரை கேளுங்கள் . மேலும் பிரபலமானவர்களின் சிறுகதைகளை தொடர்ந்து கேட்க பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் .