வைக்கம் முஹம்மது பஷீரின் "பால்யகால சகி"



 கதை சொல்கிறேன்.

இது ஒரு முழு நாவல் . பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட புனைகதை ‘பால்யகால சகி’. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக் கூடியதாகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷீரை மலையாளப் படைப்பாளிகளில் ‘உம்மிணி வலிய ஓர் ஆளாக’ - இன்னும் பெரிய ஒருவராக - ஆக்குகிறது. ‘பால்யகால சகி’க்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனால்தான். முழுமையாக பாருங்கள் . மறக்காமல் பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் . உங்கள் கருத்துக்களையும் ,உங்கள் விருப்பங்களையும் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் . இதுபோன்ற முழு நாவல்களும் ,குறு நாவல்களும் ,சிறுகதைகளும் இந்த சேனலில் தொடர்ந்து வெளிவரும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

"இரவின் காலடி ஓசை"

பச்சைக் கனவு-லா. ச. ராமாமிர்தம்

CRIME STORY-சுஜாதாவின் " மோதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்"( க்ரைம் குறு நாவல்).