சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.
அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி.
கடந்த முப்பது ஆண்டுகாலமாகச் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம்,
குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு
தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.
நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
எனது சிறுகதைகள், கட்டுரைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம் பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளன.
இந்தியா முழுவதும் சுற்றியலைந்தவர். அவரது இந்தியா மறைக்கபட்ட இந்தியா என இரண்டு வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார்.
உலக இலக்கியம் மற்றும் உலக சினிமா குறித்து விரிவான உரைகள் நிகழ்த்திருக்கிறார். இது முன்னோடியான நிகழ்வு.
2018ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார். இவரது சஞ்சாரம் நாவலுக்காக இந்த விருது அளிக்கபட்டது.
இவரது புத்தகங்களை ஆராய்ந்து இதுவரை 21 பேர் எம்பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஆறு பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். நான்கு பல்கலைகழகங்களிலும் 12 கல்லூரிகளிலும் எனது நூல்கள் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.
கனடாவின் இயல் விருது, தமிழக அரசின் விருது, சிகேகே இலக்கிய விருது, மாக்சிம்கார்க்கி விருது , முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்த நாவலுக்கான விருது, ஞானவாணி விருது, நல்லி திசை எட்டும் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, பெரியார் விருது, துருவா விருது, எஸ்.ஆர்.வி. இலக்கிய விருது, சேலம் தமிழ் சங்க விருது, விகடன் விருது, கொடீசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, இயற்றமிழ் வித்தகர் விருது. இலக்கியச்சிந்தனை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
முழுநேர எழுத்தாளரான இவர் தற்போது தேசாந்திரி என்ற பதிப்பகம் ஒன்றை துவக்கி நடத்திவருகிறார்.
மனைவி சந்திர பிரபா. மகன்கள் ஹரிபிரசாத், ஆகாஷ்.
சென்னையில் வசித்து வருகிறார்.
இந்த கதையில்( "அப்பா புகைக்கிறார் " )ஆணாதிக்கத்தின் அருவருப்பான முகத்தை வெளிக்காட்டுகிறார் .
கடைசிவரை பாருங்கள் உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் .
மறக்காமல் தொடர்ந்து நல்ல கதைகளை தமிழில் கேட்க பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் . நன்றி.
கமலா தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுரைiயா என்ற மாதவிக்குட்டி, (மார்ச் 31, 1934 - மே 31, 2009) ஓர் இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை. கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' (தற்போது திருச்சூர் மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை வி.எம்.நாயர், மாத்ருபூமி என்ற மலையாள தினசரி செய்திதாள் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார். தாயார் நலபாத் பாலாமணி அம்மா புகழ்பெற்ற மலையாள கவிஞர் ஆவார். கமலா ஓர் பாரம்பரிய இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தவர்.[4] ஆனால் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாம் மாதத்திற்கு மாறினார். தனது பெயரை கமலா சுரையா என்று மாற்றிக்கொண்டார். கமலா பெரும்பாலும் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிவந்தார். இவரின் முதல் 'கல்கத்தாவில் கோடைகாலம்' 1965 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை தொடர்ந்து 'வம்சத்தவர்' என்ற தொகுப்பு 1967 ஆம் ஆண்டு வெளிவந்தது இது பெண்கள் மத்தியி...
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (அக்டோபர் 30, 1916 - அக்டோபர் 30, 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்திலிருந்தே எழுதி வந்தவர். இவர், தனது 92வது பிறந்த நாளில் இறந்தார். லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை தன்னுடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற புதினத்தை எழுத வைத்தது. இவருக்கு 1989-ல் சாகித்திய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது. லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவ...
எழுதுபவனுக்கு எந்த விசயத்தில் வேண்டுமானாலும் கதை கிடைக்கலாம் .ஆனால் எந்தக் கதை எழுதினாலும் அதற்குள் ஒரு செய்தி இருக்கவேண்டும்.படைப்பின் முக்கியமான கோட்பாடு இதுதான் .க்ரைம் கதைகள் என்றால் பொதுவில் அசைவமாக இருக்க வேண்டுமென்பது நியதியாகிப் போய்விட்டது.அதிலிரிந்து விடுபட்டு சற்று சாதுவாக செலுத்தவேண்டும் என்ற உத்தேசத்துடன் நெசவு செய்ய ஜனித்ததுதான் இந்த கதை. இதில்என்ன செய்தி கிடைத்தது என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் அன்புடன் சுஜாதா.
கருத்துகள்
கருத்துரையிடுக