இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணாமூச்சி- உதயசங்கர்

படம்
கந்தக பூமி என்று அழைக்கப்பட்டாலும் கரிசல் பகுதி பல இலக்கிய வளங்களை ஈன்றெடுத்திருக்கிறது. கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் துவங்கி பெரிய எழுத்தாளர் படையை கரிசல் மண் தந்திருக்கிறது, அதே கரிசல் மண் கோவில்பட்டியில் உதயமானவர் எழுத்தாளர் க. உதயசங்கர் அவர்கள். கவிதை, சிறுகதை, குறுநாவல், சிறுவர் இலக்கியம், கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் என 1980-இல் துவங்கி கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாய் இலக்கிய உலகில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர். கோவில்பட்டி இலக்கிய ஆளுமைகளுடன் இணைந்து, இலக்கியச் சந்திப்புகள், தீவிர இலக்கிய விவாதங்கள், கூட்டங்கள் என தொடர்ந்து இலக்கிய வேட்கையோடு செயல்பட்டார் உதயசங்கர். அன்றாடம் சந்திப்பது, பேசுவது என இலக்கியம் பேசாமல் எந்த ஒருநாளும் கழிந்ததில்லை. . சாதிகளின் உடலரசியல் மற்றும் பல்வேறு நூல்களில் சாதீய முரண்பாடுகளைச் சாடும் எழுத்துகளைப் பதிவு செய்து இருந்தாலும், தனது சொந்த வாழ்க்கையில் அத்தகைய கருத்துக்களுக்கு உண்மையாக வாழ்ந்து வருபவர் எழுத்தாளர் உதயசங்கர். தனது சொந்த குழந்தைகளுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்ததில் ஆகட்டும், தனது வீட்ட...

"கவிஞனின் முண்டாசுக்குள் ஒரு கருநாகம்"-வேல ராமமூர்த்தி

படம்
வேல ராமமூர்த்தி (Vela Ramamoorthy) ஓர் சிறந்த தமிழ்.எழுத்தாளர் மற்றும் சிறந்த நடிகராவார். புதுமுக வகுப்பு வரை கல்வி பயின்ற வேல ராமமூர்த்தி இந்திய இராணுவத்தில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் இவர் அஞ்சல் நிலையத்தில் பணிபுரிய அனுப்பப்பட்டார். ராமமூர்த்தி ஓர் எழுத்தாளர் என்பதால் இவரைச் சந்திக்க அஞ்சல் அலுவலகத்திற்கு பலர் வந்து செல்வார்கள். நான் என் சம்பளத்தில் பாதியை தேநீர் கடைகளில் செலவிடுகிறேன் என்று புதிய தலைமுறை தமிழ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் வேல ராமமூர்த்தி நினைவு கூர்ந்த நிகழ்விலிருந்து அன்னாரின் நட்பு வட்டாரத்தை உணர முடியும். குற்றப்பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை உள்ளிட்ட புகழ்பெற்ற தமிழ் நாவல்களை இவர் எழுதியுள்ளார். மேலும் சமகாலத்தின் முன்னணி தமிழ் கதை எழுத்தாளர்களில் ஒருவராகவும் வேல ராமமூர்த்தி கருதப்படுகிறார்.பாரதிராஜா மற்றும் இயக்குநர் பாலா ஆகியோருக்கிடையே குற்ற பரம்பரை கதையை திரைப்படமாக்குவது தொடர்பான வழக்கில் தொடர்புடையவர் ஆகிறார். குற்றப்பரம்பரை வரலாற்றின் காலகட்டத்தை திரையில் கொண்டுவரும் பெரிய சவாலை பாலாவுக்காக திரைக்கதையாக இவர் எழுதிக்கொண்டிர...

ஜீவன்‌-: கி.ராஜநாராயணன்

படம்
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா. 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர். கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய ச...

“அந்த உயிலின் மரணம்” -ஜெயகாந்தன்.

படம்
ஜெயகாந்தன் . எழுத்தாளன் சட்டத்தின் துணை கொண்டு இது சரி இது தப்பு என்று தீர்ப்பும் ,தண்டனையும் அளிக்கும் ஒரு சாதாரண நீதிபதி அல்ல. வஞ்சிக்வஞ்சிக்கப்பட்டவர்கள் இடமும், தண்டிக்கப்பட்டவர்கள் இடமும், சபிக்கப்பட்டவர்கள் இடமும், குடிகொண்டுள்ள மனித ஆத்மாவையே அவன் நாடிச்செல்கிறான் என்கிறார் ஜெயகாந்தன் தமிழிலக்கியத்தில்ஜெயகாந்தனைமுதன்மையான படைப்பாளி என்றும் புதுமைப்பித்தனுக்கு பின் தமிழில் எழுதிய மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர் என்றும் கல்வியாளர்கள்மதிப்பிடுகிறார்கள். ஜெயகாந்தன்மக்களை தமிழ் காந்த எழுத்துக்களால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும்இலக்கிய ஆளுமை." அந்த உயிலின் மரணம்" என்ற இந்தக்கதையில்மரணத்தில் ஒளிந்திருக்கும் "எப்போது" என்ற மர்மத்தைவிவரிக்கிறது. பல மரணங்கள் வாழ்க்கையின் பழக்குற்றங்களையும், குற்ற உணர்வுகளையும்,மரணிக்கச் செய்கின்றன. கதை முடியும்போது மரணம் பற்றிய பயங்களும்,பொதுப்புத்திகளும்,மரணித்திருக்கும் இந்த கதை 1969இல் ஆனந்தவிகடனில்முத்திரைக்கதையாகவெளிவந்தது.  

அழிந்துபோனஅத்தியாயம்- . ஹமீது தம்பி

படம்
  அழிந்துபோனஅத்தியாயம் BY ஹமீது தம்பி இந்த கதை " அழிந்துபோனஅத்தியாயம் ".. ஓர் உண்மைக்கதை. இது 1950-60 களில் நடந்தது .இது தமிழகத்தின் தென் கோடியில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்தில் வாழ்ந்த ஒரு சாமானியனின் கதை . சேது பூமியும் , இலங்கையும் ஒரே நாடுபோல் இருந்த காலம் . அது விடுதலைப்புலிகளின் போராட்டங்களுக்கு முந்தைய காலகட்டம் . இந்த கதையில் உண்மையும் ,புனைவும் சேர்ந்திருந்த போதிலும் ,உண்மையின் ஆதிக்கம் அதிகம் .இது அன்றைய கால கட்டத்தில், கடைக்கோடியில் கிராமமாக இருந்த ஊரின் வாழ்க்கையை சொல்லும் முயற்சி . .

இணைப் பறவை - ஆர்.சூடாமணி

படம்
  ஆர். சூடாமணி (R. Chudamani, சனவரி 10, 1931 – செப்டம்பர் 13, 2010) தமிழக எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்ட இவர், ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிக் கதிர், கல்கி, ஆனந்த விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர். இவரது முதலாவது சிறுகதை காவேரி என்ற பெயரில் 1957 இல் பிரசுரமானது. 1960 இல் தனது மனதுக்கு இனியவள் என்ற புதினத்தை எழுதினார்.. இருவர் கண்டனர் என்ற இவர் எழுதிய நாடகம் பல முறை மேடையேற்றப்பட்டது. பல இலக்கிய விருதுகளைப் பெற்ற ஆர். சூடாமணி ஆரவாரம் இல்லாமல், மிக எளிமையாக, மத்திய தர வாழ்க்கையையும் அதன் மனிதர்களையும், குறிப்பாக பெண்களையும் பற்றி நிறைய எழுதியுள்ளார். இரவுச்சுடர் என்ற இவரது கதை “யாமினி” என்ற பெயரில் 1996 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 'சூடாமணியின் கதைகள்' என்கிற பெயரில் இவரது சிறுகதைகளின் தொகுப்பொன்று வெளிவந்தது. "உள்ளக் கடல்' என்ற நாவலையும், நூற்றுக்கும் அதிகமான சிறுக...

"அவசரம்"-: திலகவதி

படம்
ஜி. திலகவதி கோ. திலகவதி (பிறப்பு:1951) - தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனர். தமிழ் எழுத்தாளர். 2001ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். திலகவதி தன்னுடைய பள்ளிக் கல்வியை தர்மபுரியில் பெற்றார். வேலூர் ஆக்சீலியம் கல்லூரியில் பொருளாதாரத்தில் கலை இளவர் பட்டம் பெற்றார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் கலை முதுவர் பட்டம் பெற்றார். பின்னர் தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஒன்றியப் பொதுப் பணியாளர் தேர்விற்கான பயிற்சி நடுவத்தில் (UPSC Civil Service coaching centre, run by Department of Backward Development) சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்றார். அத்தேர்வில் வெற்றிபெற்று தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானார். சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். திலகவதி 9 புதினங்கள், 18 குறும்புதினங்கள், 9 சிறுகதைத் தொகுதிகள், 11 கட்டுரைத்தொகுப்புகள், 14 மொழிபெயர்ப்புத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். விருதுகள் சாகித்ய அகாதம...

"தூசி"--- ராஜம் கிருஷ்ணன்

படம்
  எளிய மனிதர்களின் நாயகி : ராஜம் கிருஷ்ணன் தமிழ்ப் படைப்புலகின் மிக நீண்ட வரலாற்றில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. படைப்புக் களத்தைப் போர்க்களத்திற்கு நிகராக எண்ணி, கீழ்மைகளுக்கு எதிராகத் தொடர்ந்து வாள் சுழற்றியவர் ராஜம் கிருஷ்ணன். கதைக் கருவை முடிவுசெய்தவுடன் அந்தக் களத்துக்கே சென்று தரவுகளைத் தேடி கண்டடைந்தவர் அவர். அவரின் மொழியிலேயே கூற வேண்டுமென்றால், “ஒரு நாவல் என்பது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக் கோவை என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நாவல் புனைகதைதான். ஆனால், மனித வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகளிலும், நிலைகளிலும் பிரத்தியட்சங்கள் எனப்படும் உண்மை வடிவங்களைத் தரிசித்த பின்னர் அந்த அனுபவங்கள் எனது இதய வீணையில் மீட்டிவிட்ட சுரங்களைக் கொண்டு நான் இசைக்கப் புகும் புதிய புதிய அனுபவங்களை நாடி நான் புதிய களங்களுக்குச் செல்கிறேன்”. அவர் கூறியுள்ளவாறு புனைவுகளை உருவாக்க அவர் மேற்கொண்ட பயணங்களும், அதன்வழி அவர் பெற்ற அனுபவங்களும் அசாதாரணமானவை. மனித வாழ்வைத் தரிசிக்க, மனித அவலங்களைக் கண்டறிய எனத் தொடர்ந்து பல்வேறு நெருக்கட...