இணைப் பறவை - ஆர்.சூடாமணி
ஆர். சூடாமணி (R. Chudamani, சனவரி 10, 1931 – செப்டம்பர் 13, 2010) தமிழக எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்ட இவர், ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிக் கதிர், கல்கி, ஆனந்த விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர்.
இவரது முதலாவது சிறுகதை காவேரி என்ற பெயரில் 1957 இல் பிரசுரமானது. 1960 இல் தனது மனதுக்கு இனியவள் என்ற புதினத்தை எழுதினார்.. இருவர் கண்டனர் என்ற இவர் எழுதிய நாடகம் பல முறை மேடையேற்றப்பட்டது. பல இலக்கிய விருதுகளைப் பெற்ற ஆர். சூடாமணி ஆரவாரம் இல்லாமல், மிக எளிமையாக, மத்திய தர வாழ்க்கையையும் அதன் மனிதர்களையும், குறிப்பாக பெண்களையும் பற்றி நிறைய எழுதியுள்ளார். இரவுச்சுடர் என்ற இவரது கதை “யாமினி” என்ற பெயரில் 1996 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 'சூடாமணியின் கதைகள்' என்கிற பெயரில் இவரது சிறுகதைகளின் தொகுப்பொன்று வெளிவந்தது. "உள்ளக் கடல்' என்ற நாவலையும், நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
ஆர்.சூடாமணி குறித்து அம்பை =
ஆர். சூடாமணி குறித்து யாராவது எழுதவோ பேசவோ கூறினால், முதலில் மனத்தில் தோன்றும் சொல் ‘மனத்துக்கினியவள்’தான். அது, அவளுடைய முதல் நாவலின் பெயர். அதுதான் நான் அவளை உணர்ந்த விதமும்.
கருத்துகள்
கருத்துரையிடுக