கண்ணாமூச்சி- உதயசங்கர்
கந்தக பூமி என்று அழைக்கப்பட்டாலும் கரிசல் பகுதி பல இலக்கிய வளங்களை ஈன்றெடுத்திருக்கிறது. கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் துவங்கி பெரிய எழுத்தாளர் படையை கரிசல் மண் தந்திருக்கிறது, அதே கரிசல் மண் கோவில்பட்டியில் உதயமானவர் எழுத்தாளர் க. உதயசங்கர் அவர்கள். கவிதை, சிறுகதை, குறுநாவல், சிறுவர் இலக்கியம், கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் என 1980-இல் துவங்கி கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாய் இலக்கிய உலகில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்.
கோவில்பட்டி இலக்கிய ஆளுமைகளுடன் இணைந்து, இலக்கியச் சந்திப்புகள், தீவிர இலக்கிய விவாதங்கள், கூட்டங்கள் என தொடர்ந்து இலக்கிய வேட்கையோடு செயல்பட்டார் உதயசங்கர். அன்றாடம் சந்திப்பது, பேசுவது என இலக்கியம் பேசாமல் எந்த ஒருநாளும் கழிந்ததில்லை.
. சாதிகளின் உடலரசியல் மற்றும் பல்வேறு நூல்களில் சாதீய முரண்பாடுகளைச் சாடும் எழுத்துகளைப் பதிவு செய்து இருந்தாலும், தனது சொந்த வாழ்க்கையில் அத்தகைய கருத்துக்களுக்கு உண்மையாக வாழ்ந்து வருபவர் எழுத்தாளர் உதயசங்கர். தனது சொந்த குழந்தைகளுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்ததில் ஆகட்டும், தனது வீட்டில் சடங்குகள் மற்றும் இதர பொது நம்பிக்கைகளிலிருந்து விலக்குதலாகட்டும் எல்லாவற்றிலும் தானே ஒரு முன்னுதாரணமாக இருந்து செயல்படுபவர்.
ரயில்வே துறையில் அதிகாரியாக பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர்; அவரது பணி அணுபவங்களும் அவரது “குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு”, "துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்" போன்ற சிறுகதைகளில் வெளிப்படுகிறது. இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளராக செயலாற்றி வருகிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக