"அவசரம்"-: திலகவதி


ஜி. திலகவதி கோ. திலகவதி (பிறப்பு:1951) - தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனர். தமிழ் எழுத்தாளர். 2001ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். திலகவதி தன்னுடைய பள்ளிக் கல்வியை தர்மபுரியில் பெற்றார். வேலூர் ஆக்சீலியம் கல்லூரியில் பொருளாதாரத்தில் கலை இளவர் பட்டம் பெற்றார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் கலை முதுவர் பட்டம் பெற்றார். பின்னர் தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஒன்றியப் பொதுப் பணியாளர் தேர்விற்கான பயிற்சி நடுவத்தில் (UPSC Civil Service coaching centre, run by Department of Backward Development) சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்றார். அத்தேர்வில் வெற்றிபெற்று தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானார். சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். திலகவதி 9 புதினங்கள், 18 குறும்புதினங்கள், 9 சிறுகதைத் தொகுதிகள், 11 கட்டுரைத்தொகுப்புகள், 14 மொழிபெயர்ப்புத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். விருதுகள் சாகித்ய அகாதமி விருது தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2020)
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Fyodor Dostoevsky

பச்சைக் கனவு-லா. ச. ராமாமிர்தம்

"அச்சக்காடு"-எழுதியது "கிருஷ்ணா டாவின்சி"