பூனைகள் இல்லாத வீடு -சந்திரா தங்கராஜ் .


 

சந்திரா தங்கராஜ் சென்னைக்கு வந்து 27 ஆண்டுகள் ஆகின்றன. பத்திரிக்கையாளர் பின் திரைப்படத்துறை என்றெல்லாம் இத்தனை ஆண்டுகள் பயணித்தாலும், பிறந்த ஊரான தேனி மாவட்டத்தின் கூடலூரை இன்னும் சுமந்து கொண்டிருப்பது, இந்தக் கதைகளை வாசிக்கையில் தெரிகிறது. சோளம் மற்றும் பூனைகள் இல்லாத வீடு என்ற தொகுதிகளில் வெளிவந்திருக்கும் இந்த கதை, கி ராமகிருஷ்ணன் அவர்களின் தமிழில் சிறந்த 100 சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.பூனைகள் இல்லாத வீடு, ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ந்து ஒவ்வொருவராக வெளியேறி முற்றத்தை வெற்றிடமாக்கி போவதை சொல்வதுடன் முடிவதில்லை. கதைக்குள் கதையாக பெரியம்மா குடும்பத்தின் கதையும் இருக்கிறது. ஒரு சிறுவனின் பார்வையில் நகரும் கதையில் காலம் அவனது வளர்ச்சியை போலவே வேகமாக கடந்து செல்கிறது. ஒரு கூரையின் கீழ் அடித்துக்கொண்டும், கொஞ்சிக் கொண்டும் வாழ்ந்தவர்கள், இனி அவரவர் வாழ்க்கையை வாழப் போவதை எந்த ஆரவாரமும் இல்லாமல் சொல்லி பிரதான கதை நகர்ந்து முடிகிறது. ஆனால் கிளை கதையில் முக்கியமான ஒரு விஷயத்தை மறைத்து வைத்திருக்கிறார் சந்திரா. பூனைகள் என்பது குறியீடு இந்தத் தொகுப்புகளை மூன்று விதமாக பிரிக்கலாம். முதலாவது மேற்குத் தொடர்ச்சி மலையின் காற்றையும், நினைவில் ஊறிய ஊரின் வாசத்தையும், சொல்லும் கதைகள். இரண்டாவது நாட்டார் கதைகளின் சாயல் கொண்ட கதைகள். கடைசியாக சென்னை வாழ்வு, சினிமா துறை பற்றியதாகும். இவர் இயக்குனர் அமீர் போன்றவர்களிடம் உதவ இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இவர் இயக்கிய கள்ளன் என்ற திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக மக்களால் வரவேற்கப்பட்டது. இவர் சிறந்த கவிஞர் . இவரின் கவிதை தொகுப்புகள் பல புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Fyodor Dostoevsky

பச்சைக் கனவு-லா. ச. ராமாமிர்தம்

"அச்சக்காடு"-எழுதியது "கிருஷ்ணா டாவின்சி"