மரப்பாச்சி - உமா மகேஸ்வரி`



 ·         உமா மகேஸ்வரி 1971ஆம் ஆண்டு போடி நாயக்கனூரில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தனது பதின் வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கியவர். 1985இல் கவிதை எழுதத் தொடங்கி, சிறுகதை, நாவல் என இலக்கிய உலகில் தமது தளத்தை உருவாக்கிக்கொண்டவர். நட்சத்திரங்களின் நடுவே(1990), வெறும்பொழுது(2002), கற்பாவை(2004), என மூன்று கவிதைத் தொகுதிகளும் மரப்பாச்சி(2002), தொலைகடல் (2004), அரளிவனம்(2008) என்று மூன்று சிறுகதைத் தொகுதிகளும் யாரும் யாருடனும் இல்லை(2003) என்ற நாவலும் இவருடைய ஆக்கங்களாகும். கதா விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, இந்தியா டுடேயின் சிகரம் விருது, ஏலாதி, கணையாழி, இலக்கியச் சிந்தனை, கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசு எனப் பல விருதுகளையும் பரிசு களையும் தமது ஆக்கங்களுக்காகப் பெற்றிருக்கிறார். ஆண்டிப்பட்டி யில் வசித்து வருகிறார்.

·         மரப்பாச்சி தொடங்கி ரணகள்ளி வரை 14 கதைகள் மரப்பாச்சி தொகுதியிலும் மூடாதஜன்னல் முதல் தொலைகடல் வரை 14 கதைகள் தொலைகடல் தொகுதியிலும் அரளிவனம் முதற்கொண்டு கனகாம்பரத் திரைகள் வரை 14 கதைகள் அரளிவனம் தொகுதியிலு மாக 42 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவரது சிறுகதை கள், ஆணுலகம் சார்ந்த கருத்தியல்கள் பெண்ணுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகின்றன? பெண்ணை எவ்வாறு செயல்படுத்து கின்றன? என்பதைக் கட்டவிழ்த்து வெளிப்படுத்துகின்றன. பெண்களின் தொலைந்துபோன வாழ்க்கையை இக்கதைகள் பேசுகின்றன. ஆணாதிக்கச் சமூகத்தின் ஒருதலைப்பட்சமான செயற்பாடுகள் கட்டவிழ்க்கப்படுகின்றன.

இந்தக்கதை , குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலினக் கொடுமை பற்றியது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Fyodor Dostoevsky

பச்சைக் கனவு-லா. ச. ராமாமிர்தம்

"அச்சக்காடு"-எழுதியது "கிருஷ்ணா டாவின்சி"