"பந்தயம்"- ஆன்டன் செகாவ். தமிழாக்கம்-கீதா மதிவாணன் .
ரஸ்ய எழுத்தாளர் அன்டன் செக்கோவ். ரஷ்ய இலக்கியங்கள் மட்டுமல்ல உலக இலக்கிய வரிசையிலும் , தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் .டால்ஸ்டாய்,கோர்கி, புஷ்கின் போன்ற ரஷ்ய எழுத்துலக மேதைகளின் வரிசையில் இருப்பவர்.”The Bet” என்ற .இந்த சிறு கதையை தமிழில் மொழிபெயர்த்திருப்பது கீதா.மதிவாணன்.
ஜார் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் 19 ம் நூற்றாண்டில் இருந்த சமூகத்தை அருமையான இந்த சிறுகதையில் சொல்லி இருக்கிறார் செக்கோவ். அது இன்றைய சமூகத்தையோ ,அல்லது நம் நாட்டிலோ இன்றும் பொருந்தும் நிகழ்வாகத்தான் இருக்கிறது .
நானூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைச் செகாவ் எழுதியிருக்கிறார். அதில் இருபது முப்பது கதைகள் தமிழில் வந்திருக்கின்றன. புதிதாக நிறைய மொழிபெயர்ப்புகளும் நடந்து வருகின்றன. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் செகாவ் அளவிற்கு மாறுபட்ட சிறுகதையை எழுதியவர்கள் குறைவே,
செகாவின் நாடகங்களை வாசித்தால் அதில் வரும் கதாபாத்திரங்கள் நாவலின் மனிதர்களைப் போலவே தோன்றுகிறார்கள். அவற்றைப் பெரிய நாவலாக எழுதியிருந்தால் இன்னும் கதை விஸ்வரூபம் கொண்டிருக்கக் கூடும்.
காதலைக் கொண்டாடியவர் செகாவ். சொந்த வாழ்விலும், படைப்பிலும் காதலே அவரது ஆதாரப்புள்ளி. காசநோய் முற்றிய நிலையில் சிகிட்சைக்காகப் பாடன்பாடனுக்குச் செல்ல திட்டமிட்ட செகாவ், மாஸ்கோ நகரை விட்டு நீங்கும் முன்பாகக் கடைசியாக ஒரு முறை மாஸ்கோ மிருககாட்சி சாலைக்குச் சென்றிருக்கிறார். அது அவருக்கு விருப்பமான இடம். இரவு முழுவதும் மாஸ்கோ வீதியில் சுற்றி அலைந்திருக்கிறார். நினைவுகளின் பாதையில் சென்ற பயணம் தானோ என்னவோ.
“இந்த பூமியில் மனிதனுக்குத் தேவை ஆறடி என்று சொல்வார்கள். இதை மறுத்து செகாவ் சொல்கிறார்
“சவத்திற்குத் தான் ஆறடி நிலம் வேண்டும், மனிதனுக்கு ஒட்டுமொத்த உலகமும் வேண்டியுள்ளது“
உயிருள்ள மனிதனின் தேவையும் இறந்தவர்களின் தேவையும் ஒன்றில்லை, செகாவ்வின் இந்த வாசகம் வாழ்வின் மீதான அவரது பற்றுதலின் வெளிப்பாடு..
கருத்துகள்
கருத்துரையிடுக