"அச்சக்காடு"-எழுதியது "கிருஷ்ணா டாவின்சி"


 
மறைந்த கிருஷ்ணா டாவின்சி அவர்கள் . 2009ம் ஆண்டு எழுதிய இந்தக்கதை இன்று மிகவும் போருந்திப்போவது, ஆச்சரியமாக இருக்கிறது. இவரும்,அந்த டாவின்சிபோல், இந்த டாவின்சியும் தீர்க்கதரிசியா? என்று தோன்றுகிறது. எல்லோரையும் எல்லோருக்கும் பிடிக்காது. ஆனால் எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான கிருஷ்ணாவை அனைவருக்குமே பிடிக்கும். பத்திரிக்கை உலகில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறோம் என்பதையும் தாண்டி, மிகப்பெரிய எழுத்தாளர் என்பதையும் தாண்டி, அந்த சிரித்த முகம் நையாண்டித்தனமான பேச்சு என அனைவரையும் வசீகரிக்கும். கிருஷ்ணாவைப் போலவே அவரது எழுத்துக்களும் வசீகரமானவைதான். முதன்முதலில் மாலைமதியில் எழுதத்தொடங்கியது முதல் அவரது கடைசி புத்தகமாக ‘இசையானது’ வரை ஒவ்வொரு எழுத்துக்களும் ஆழமான கருத்துச் செறிவுகளை கொண்டவை. வெங்கடகிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட கிருஷ்ணா டாவின்சி (பிறப்பு: மே 7, 1968 இறப்பு: ஏப்ரல் 4, 2012) ஓர் இதழாளர், எழுத்தாளர், திரைப்பட உரையாடல் எழுதுநர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர்.

சுகந்தி என்னும் புனைப்பெயரில் கதைகள் எழுதிய தன் தந்தையைப் பார்த்து எழுத்தார்வம் கொண்டவர். பலதுறை அறிஞரான லியானர் டோ டாவின்சியைப் போல தானும் பல்துறை வல்லுநராகத் திகழவேண்டும் என விரும்பி கிருஷ்ணா டாவின்சி என தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார். தென்னக இருப்புப்பாதைத் துறையில் பயணச்சீட்டு ஆய்வாளாரக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் முழுநேர எழுத்தாளராக மாறிவிட்டார். மாயக்குதிரை என்னும் இவரது முதல் தொடர்கதை கல்கி இதழில் வெளிவந்தது. அதனையொட்டிய சில நாட்களிலேயே குமுதம் இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். தமிழின் முதல் இணைய இதழான குமுதம்.காம் இதழின் முதற் பொறுப்பாசிரியர். திரைப்படத் துறையிலும் எழுத்துலகிலும் செயற்பட்டுக் கொண்டிருந்தவர். 28 புதினங்களும் 50 சிறுகதைகள், எண்ணற்ற கட்டுரைகளை எழுதியவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Fyodor Dostoevsky

பச்சைக் கனவு-லா. ச. ராமாமிர்தம்