"ராட்சஸம்": கவிகோ அப்துல் ரகுமான்
கவிக்கோ என்று சொல்லப்படும் தமிழ் கவிஞர் அப்துல் ரஹ்மான் மதுரையில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையும் தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள் .கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று இலக்கண இலக்கியங்களைக் கற்று கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம் ,அரபி ,உருது ,பாரசீகம், இந்தி ,ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர் .இவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார் .இத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள் ,படிமங்கள் ,குறியீடுகள் , ஆகியவற்றின் வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ ,கஸல், ஆகிய பிற மொழி இலக்கியங்களை முனைந்ததிலும்,பரப்பியதிலும் ,இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். 1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்க கவிதைகளாலும் சிறப்பித்துள்ளார் சிலேடை வார்த்தைகளால் கேட்போரை கவர்வது இவரது பாணி வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் 20 ஆண்டுகள் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார் ..ஆலாபனை கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். கவியரசர் பாரதி விழா விருதுஃ, தமிழன்னை விருது ,பாரதிதாசன் விருது, கலைமாமணி ,கம்பர் விருது ,உமறுப்புலவர் விருது, உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்
கருத்துகள்
கருத்துரையிடுக