"பாலை மனம்"- -இந்துமதி


இந்துமதி அவர்களுக்கு நன்றியுடன் . இந்துமதி - தொலைக்காட்சி தொடர்கள் வருவதற்கு முன்பு, பிரபல பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகள்தான் பெண்களின் பெரும் பொழுதுபோக்கு. அப்படி தொடர் எழுதி, பெண்களின் மனதைக் கொள்ளையடித்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் எழுத்தாளர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் என இவரது எழுத்துலகப் பணி விரிகிறது. பலருக்கும் பிடித்தமான ஆதர்ச எழுத்தாளர் இவர். பலரும் சந்திக்க ஆசைப்பட்ட ஆளுமை. எழுத்துலகில் தன் நீண்ட நெடிய பயண அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டவை: தன்னைப்பற்றி நான் பார்த்த, கேட்ட, என்னை பாதித்த சம்பவங்கள்தான் என் கதைக்கருக்கள். என் மனதை பாதிக்காத அல்லது நெகிழ வைக்காத எதுவும் கதையாவதில்லை. வெறும் கற்பனைக் கதைகள் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள், சம்பவங்கள், நான் பழகிய மனிதர்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் என அவற்றைக் கொஞ்சம் கற்பனை கலந்து எழுதுகிறேன். ‘இதை எழுது எழுது’ என மனசு சொல்ல வேண்டும். அப்படி எழுதும்போதுதான் ஆத்மார்த்தமான எழுத்து வெளிவரும். பொற்கோவில் பிரச்னை வந்த போது, ஒரு சீக்கிய பையனை சிலர் துரத்திக்கொண்டு வந்து இருக்கிறார்கள். அந்த வழியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி ஆட்டோவில் வந்து கொண்டிருந்திருக்கிறார். அவன் இவரிடம் உதவிக்கேட்டிருக்கிறான். துரத்தி வந்தவர்கள் அருகில் வரவே பயத்தால் அந்த பெண்ணால் அந்த சிறுவனுக்கு உதவ முடியவில்லை. அந்த செய்தியை நாளிதழில் படித்ததில் இருந்து நான்கு நாட்களாக எனக்குஅந்த பையன் என்னிடம் கெஞ்சுவது போலே இருந்தது. அந்த பாதிப்பில் நான் எழுதியது தான் ‘குருத்து’ எனும் கதை. நான் பெரும்பாலும் அறிவுரை எதுவும் சொல்வதில்லை. உயிரோட்டமாக எழுதுவேன். அதில் தேவையானதை எடுத்துக்கொள்வது வாசகருடைய பொறுப்பு. என் கதைகளில் கூட சில கதைகளில் முடிவென்று எதுவும் இருக்காது. அதை வாசகர்களின் யூகத்திற்கே விட்டுவிடுவேன்.
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Fyodor Dostoevsky

பச்சைக் கனவு-லா. ச. ராமாமிர்தம்

"அச்சக்காடு"-எழுதியது "கிருஷ்ணா டாவின்சி"