"மீராவும் முஹம்மது ஆரிபும்- எழுதியது நிர்மலா ராகவன் .
நிர்மலா ராகவன் மலேசியாவில் 1942 பிறந்தார் மலேசியாவில்
சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். ஓய்வு பெற்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியையான இவர் ஆங்கிலம்
தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதக்கூடியவர். 1967 தொடக்கம்
இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகிறார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை,
தொடர்கதை, வானொலி நாடகம் ,விமர்சனங்கள், போன்றவற்றை எழுதி வருகிறார். இவரின் இத்தகைய
ஆக்கங்கள் மலேசியாவில், பிரபல ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. பல
பல மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் பேசியுள்ளார் .இந்தியர்களிடையே காணும் சமுதாயப்
பிரச்சினைகள் குறித்து தீவிரமாக சிந்திக்கும் இவர், தமது எழுத்துகளில் அவற்றின் தீர்வு
காண ஆலோசனைகள் வழங்கி வருகிறார். மனோ நிலைகள் பற்றியும் அதிகம் எழுதியுள்ளார் .நேரடி
சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். சிறுகதை செம்மல் விருது 1991 லும் ,சிறந்த பெண் எழுத்தாளர் விருது 1993-லும், சிறந்த
சிறுகதை எழுத்தாளர் என்ற அதற்கான விருது தங்கப்பதக்கம் மலேசிய எழுத்தாளர் சங்கம்
2006 இல் இவருக்கு கிடைத்தது.
.
தொடர்ந்து இந்த சேனலில் வரும் படித்ததில் பிடித்த கதைகளை கேட்க பெல் பட்டனை அழுத்தி, சப்ஸ்கிரைப் செய்யுங்கள் உங்களுடைய கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். அது எங்களை மேலும் வளர்த்துக்கொள்ள மிக உதவியாக இருக்கும் உங்கள் ஆதரவுக்கு நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக