"விபத்து": எழுதியவர் " இன்குலாப்"


களந்தை பீர்முகம்மது அவர்கள் மதநல்லிணக்கப் போராளிகள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்து வெளியிட்ட " சலாம் இஸ்லாம்" என்ற சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு புத்தகத்திலிருந்து படித்தது. சமூக மாற்றத்துக்காகப் பேனா பிடித்தவரின் எழுத்துக்கள் எதிர்ப்பு இலக்கியமாய்த்தானே இருக்க முடியும்? இலக்கியத்தின் வேலை என்ன? என்று கார்க்கியைக் கேட்டபோது, வேறென்ன போராட்டம்தான்; அதுதான் இலக்கியத்தின் முதல் வேலை என்று சுட்டிக் காட்டினார். இன்குலாப் கார்க்கியின் சீடர்... புதிய திசை வழியைத் தேடி வரும் இன்றைய படைப்பாளிகள் பலருக்கும் இன்குலாப் ஆசான்.... இன்குலாப் (Inkulab, பிறப்பு: 1944 - இறப்பு: திசம்பர் 1, 2016) தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும். 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது இவர் எழுதிய காந்தள் நாட்கள் என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப் பின்னர் வழங்கப்பட்டது.[1] ஆனால், அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர் தொடக்கக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராக இருந்து, பிற்காலத்தில் மார்க்சியக் கொள்கையாளர் ஆனார். கீழவெண்மணியில் 1968 இல் நிகழ்ந்த 43 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட நிகழ்விற்குப் பிறகு இன்குலாப் மார்க்சியத்தை நாடினார். கம்யூனிச்டு இயக்கச் சார்பாளர் ஆனபிறகு மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் மா. லெ. அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனைச் சந்தித்தார். கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார். கதையை முழுமையாக கேளுங்கள் . . இதுபோன்ற நான் படித்ததில் பிடித்த சிறுகதைகளும் ,முழு நாவல்களும் ,குறு நாவல்களும் , இந்த சேனலில் தொடர்ந்து வெளிவரும். மறக்காமல் பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் . உங்கள் கருத்துக்களையும் ,உங்கள் விருப்பங்களையும் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரப்பாச்சி - உமா மகேஸ்வரி`