"அப்பா மகள்" எழுதியது ப்ரியா தம்பி

 கதை சொல்கிறேன்.-30

உனது எழுத்தை உனது மொழியில் நீயே எழுது’ - என்றார் கவிஞர் இன்குலாப். ஆண்கள், பெண் வேடமிட்டு எழுதிய எழுத்துகளில் கழிவிரக்கமும், ‘உங்களுக்கு ஆதரவாக நான்’ என்ற வீண் ஜம்பமும்தான் வெளிப்பட்டது. இதையே பெரியார், ‘பெண்களுக்காக ஆண் பாடுபடுவதாகச் சொல்வது எலிகளுக்காகப் பூனைகள் பாடுபடுவதாகச் சொல்வதைப்போல’ என்றார். அடக்கப்பட்ட சமூகமே அவர்களது பிரச்னையை எழுத, பேச, போராடப் புறப்பட்டதுதான் இந்த நூற்றாண்டின் மிக முக்கிய எழுச்சி. அந்த வரிசையில் கவனிக்கத்தக்கது ப்ரியா தம்பியின் எழுத்துக்கள். இந்த "அப்பா மகள்" கதையில் ஆண்களின் வக்கிரங்களை ,அவர்களில் படிப்போ ,அறிவோ புகழோ பதவியோ கூட மாற்றுவதில்லை என்பதையும் ஒரு தந்தை மகளுக்கிடையில் உள்ள அன்பு வெளியில் தெரியா உணர்வுபூர்வமானது என்பதையும் படம்பிடிக்கிறார் ப்ரியா தம்பி . இந்த அருமையான சிறுகதையை கடைசிவரை பாருங்கள் . தொடர்ந்து தமிழ் கதை கேட்க பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் . உங்கள் விமர்சனங்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் .நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரப்பாச்சி - உமா மகேஸ்வரி`