"வானவர்கள் செல்லும் இடங்கள்" எழுதியவர் தோப்பில் முஹம்மது மீரான்
“தோப்பில் முஹம்மது மீரான், தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத படைப்பாளி. இஸ்லாமிய குடும்ப வாழ்வை, பாசாங்கில்லாமல் பதிவுசெய்தவர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகங்கள் அவருக்கு உண்டு. மீரான் 1944-ல் கன்னியாகுமரியின் தேங்காய்ப்பட்டினத்தில் பிறந்தார். 1988-ல் வெளியான இவரது `ஒரு கடலோர கிராமத்தின் கதை' தோப்பில் முஹம்மது மீரான் என்ற அசலான படைப்பாளியை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தது. இஸ்லாமிய வாழ்வியலில் உள்ள பல்வேறு பிரச்னைகளை வெளி உலகுக்குத் தெரியாத அவர்களின் வழக்கங்களை தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தியதில் மீரானுக்குப் பெரும்பங்கு உண்டு. அவருடைய படைப்புகள் அனைத்தும் இஸ்லாமியச் சமூகம் குறித்து நமக்குக் கிடைத்த மிகப்பெரும் ஆவணங்கள். சாகித்திய அகாடமி போன்ற விருதுகளைப் பெற்றவர், அகாடமி தேர்வுக் குழுவிலும், பாடநூல் தேர்வுக் குழுவிலும் இருந்தவர். பல விருதுகளும் பொறுப்புகளும் பெற்றபோதும் எளிமையாய் இருந்த இனிய மனிதர். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். என் போன்ற பல சின்ன எழுத்தாளர்களுக்கு அவர் ஒரு நல்ல வழிகாட்டி. அவர் வீட்டில் அனைவருமே வெகு இயல்பாய்ப் பழகக்கூடியவர்கள். இந்...